பெரம்பலூர் I.T.I. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 23ம் தேதி தொடங்கி 27ம்தேதிவரை நடக்கிறது.
பெரம்பலூர், ஜூலை 21:
பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 23ம் தேதி தொடங்கி 27ம்தேதிவரை நடக்கிறது.
அரசு தொழிற்பயிற்சிநிலைய முதல்வர் மஞ்சுளாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 100 சதவீத இடங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசால் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 50 சதவீத இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. இதன்படி விண்ணப்பதாரர்களில் எட்டாம்வகுப்பினை கல்வித்தகுதியாகக் கொண்டவர்களுக்கு வருகிற 23 மற்றும் 24 தேதிகளில் காலை 10 மணி முதல் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பதாரர்களில் பத்தாம் வகுப்பினை கல்வித்தகுதியாகக் கொண்டவர்களுக்கு வருகிற 24ம்தேதி மதியம் 2 மணி முதலும், 25 மற்றும் 27ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5மணி வரையிலும், பெரம்பலூரிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் விண்ணப்பித்துள்ள நபர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் பங்கேற்க மாண வர்கள் பெற்றுள்ள கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கான மதிப்பெண்கள் அடிப் படையில் தரவரிசை வழங்கப்பட்டு, அதன்படி அழைக்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பித்தவர்களில் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள், கிடைக்கப் பெறாதவர்கள் பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 23ம்தேதி தொடங்கி 27ம்தேதிவரை நடத்தப்படும் கலந்தாய்வில் கலந்து கொள்ள கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பான மேலும் விபரங்களை அறிந்து கொள்ள அரசுதொழிற் பயிற்சி நிலையத்தின் தொலைபேசி எண் 04328&290590ல் தொடர்பு கொள்ள வேண்டும் என அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மஞ்சுளாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments