தமிழகத்தில் BJP இந்து முன்னணியின் கந்துவட்டி கள்ளத்தொடர்பு கொலைகளும் , தமிழ்நாட்டை கலவர பூமி ஆக்கதுடிக்கும் வெறுப்பு அரசியலும் …!
முதலில் சக மனிதன் என்ற முறையில் இந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து இவர் ஆன்ம சாந்தி அடைய ஆழ்ந்த இரங்கலையும் இன்று ஒரு தகவல் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .
அரசு உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தபடவேண்டும் என்றும் இது போன்ற படுகொலைகள் ஊக்குவிக்காத வண்ணம் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் !
கடந்த ஓராண்டில் பாஜக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் நடுரோட்டில் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . இந்த கொலைகள் நடந்தவுடன் வழக்கம் போல பொறுப்பற்ற ஊடகங்களும் RSS BJP இந்து முன்னணி சங் பரிவார்கள் வழக்கம் போல தனது காழ்புணர்ச்சி காரணாமாக சிறுபான்மையினர் மீது பழி போட்டு பஸ் எரிப்பு ,கடையடைப்பு நடத்தி அரசியல் ஆதாயம் அடைகிறது .

சில நாட்கள் கழித்து இந்த கொலைகள் தொடர்பான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்த கொலை தொடர்பான கேவலமான பின்னணி தெரிய வரும்போது , இதனை பத்திரிக்கைகள் சிறிய செய்தியாக வெளியிடுகிறது .
தற்போது சேலத்தில் பிஜேபி பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் ,
”ஏற்கெனவே பிஜேபி இந்து முன்னணி பிரமுகர்கள் வேலூர் அரவிந்த் ரெட்டி ,கோயம்மேடு விட்டல் ,பரமக்குடி முருகன் , நாகை புகழேந்தி ,ராமேஸ்வரம் குட்டநம்பு , வேலூர் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளே ஆடிட்டர் ரமேசையும் கொலை செய்திருக்கிறார்கள் ” என மோடி முதல் ராமகோபால ஐயர் வரை கூறி திங்கள் கிழமை தமிழகத்தில் கடையடைப்பு நடத்துகிறார்கள் ..

உண்மையில் மேற்படி கொலைகளை யார் எதற்காக செய்தார்கள் ? ஓர் அலசல் ரிப்போர்ட் …!
கோயம்பேடு விட்டல் கொலை 27.4.2012 .
சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127-வது வட்ட பா.ஜனதா தலைவராக இருந்தார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.27.4.2012 .அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் விட்டல் பிணமாக கிடந்தார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுந்தரபாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல் சுந்தரபாண்டியன் வீட்டுக்கு சென்று வீட்டு பெண்களை ஆபாசமாக பேசியுள்ளான் .இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன் அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை 23.10.12 .
வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜ மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24ம்இரவு 7.30 மணியளவில்,பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர் .
கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர் . உடனே முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள் .
விசாரணையில் பெண் விவகாரத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது .இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார் .
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28) மேலும், இந்த கொலையில் ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எம்எல்ஏ ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

நாகப்பட்டிணம் புகழேந்தி கொலை 5.7.12 .
நாகப்பட்டிணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53),காலை நடைபயணம் சென்ற போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது :-
கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர் .இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினான் .

ஆனால் போலீஸ் விசாரணையில் .
கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து நில ஆக்கிரமிப்பு அடாவடி செயலில் ஈடுபடுவதும் , சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது . இவனால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது . முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார் .
பரமக்குடி முருகன் கொலை 19.3.13
பரமக்குடி. பாரதீய ஜனதா முன்னாள் கவுன்சிலரான முருகன்இவர் வாஜ்பாய் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது .
வேலூர் வெள்ளையப்பன் கொலை .
இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வெள்ளையப்பன் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது.
வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அருகே 4 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர் .
இது தொடர்பாக ஜூலை 02,2013 வெளிவந்த தினமலர் செய்தியில் ”
வேலூர், புது பஸ்நிலையம் அருகே, இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், 45, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். .. ……கொலை நடந்த இடத்தில், கறுப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில், ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருந்தன. பேட்டரி இணைக்கப்பட்டிருந்த வெடி குண்டை, கொலைக்கு அல்லது தப்பி செல்லும் போது, பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பைப் வெடிகுண்டுகள், தென்மாவட்டங்களில் பிரபலம் என்பதால், தென் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர், இதில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். ”
ராமேஸ்வரம் குட்டநம்பு கொலை 7.7.13 ,
ராமேசுவரத்தை சேர்ந்தவர் குட்டநம்பு இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவராக இருந்து
வந்தார் .சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வந்தார் .சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்கள் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது .இது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் .
இப்படியாக இந்த பிஜேபி இந்து முன்னணிஇனர் குடிபோதை கந்துவட்டி கள்ளத்தொடர்பு நில ஆக்கிரமிப்பு போன்றவட்டில் ஈடுபட்டு பாதிகப்பட்டவனால் துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்யப்பட்டபோது அந்த பழியை முஸ்லிம்கள் மீது போட்டு , பஸ் எரிப்பு கடையடைப்பு பந்த் நடத்தி அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி அரசியல் ஆதாயம் அடைகின்றனர் .இவர்களை அடக்கி ஒடுக்காமல் அதிமுக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று புரியவில்லை .
கொலையாளிகள் யாராக இருந்தாலும் இதற்கு முற்று புள்ளி வைத்து மக்கள் முன் தெளிவு படுத்தினால் தான் பதற்றம் தணியும். அரசு செய்யுமா ???
கொலையாளிகள் யாராக இருந்தாலும் இதற்கு முற்று புள்ளி வைத்து மக்கள் முன் தெளிவு படுத்தினால் தான் பதற்றம் தணியும். அரசு செய்யுமா ???
நன்றி – நிழல்களும் நிஜங்களும்
Category: மாநில செய்தி
0 comments