பள்ளிவாசலுக்கு தீ வைப்பு... ராமநாதபுரத்தில் பதற்றம் .
ராமநாதபுரத்தில் பயங்கர கலவரத்தை ஏற்படுத்த முயற்சி - பள்ளிவாசலுக்கு தீ வைப்பு, எரிக்கப்பட்டது பள்ளிவாசல் - எரிந்து விட்டது திருக்குர்ஆன்........!!
ராமநாதபுரத்தில் பயங்கர கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ராமநாதபுரம் செய்யதம்மாள் ஜும்மா பள்ளியின் உள்ளே காவி பயங்கரவாதிகள் தீ வைத்தும், சேதப்படுத்தியும் சென்றுள்ளனர்.
பள்ளியின் உள்ளே இருந்த பல்லாயிரக்கணக்கான மதிப்புள்ள பொருட்களும், திருக்குர்ஆன், ஹதீஸ்உள்ளிட்ட புத்தகங்களும், தஸ்தாவேஜுகளும் தீயில் கருகின.
மேலும் பள்ளியின் உள்ளே மல, ஜலம் போன்றவற்றை கழித்து அசிங்கம் செய்தும் சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் நகரில் இச்சம்பவம் காட்டுத் தீயை விட வேகமாக பரவியதால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
தற்போது சர்ச்சைக்குரிய பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுபாட்டில் வந்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பள்ளிவாசலை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி இஸ்லாமிய இயக்கத்தினர் SP யை சந்தித்துள்ளனர். தவறு செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என SP வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
THATS TAMIL NEWS
ராமநாதபுரம், கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை தொழுவதற்கான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இங்கு நேற்று இரவு சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் பள்ளிவாசலில் இருந்த தொப்பிகள், பாய்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் அங்கு இருந்த மின்விசிறிகளும் சேதமாயின. இன்று காலையில் தொழுகை நடத்த சென்ற முஸ்லீம்கள் இதனை கண்டு அதிர்சியடைந்தனர். மர்ம நபர்களின் இந்த செயலை கண்டித்தும், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேணிக்கரை சந்திப்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி. அமைப்பினர் திரளாக பங்கேற்றனர். சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி மயில்வாகணன் ‘‘பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு காம்பவுண்ட் சுவர் உள்ளது. அத்துடன் இரவு நேர காவலாளியும் உள்ளார். அப்படி இருக்கும் போது இதுபோன்ற சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். பள்ளிவாசலுக்கு தீவைத்த மர்மநபர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்'' என்றும் எஸ்.பி கூறினார். பள்ளிவாசலுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Category: மாநில செய்தி
0 comments