.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி நோன்பிருக்கும் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள்.

Unknown | 5:00 PM | 0 comments

சாராயங், ஜூலை 22.

உலகம் முழுவதிலும் 371 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐக்கிய அரபுக் குடியரசின் மேனா பகுதியில் 34.2 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அளவு 2030ஆம் ஆண்டில் 120.9மில்லியனாக மாறக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டில், குறிப்பாக மேனா பகுதியில் இருப்பவர்களில் 18 சதவிகிதத்தினருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றது என்று சர்வதேச நீரிழிவு அமைப்பு தெரிவிக்கின்றது. சென்ற வருடக் கணக்கீட்டின்படி ஐக்கிய அரபுக் குடியரசில் 8,27,480 நீரிழிவு நோயாளிகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

ஆயினும், நடைபெற்றுவரும் ரமலான் நோன்பு மாதத்தில், 50 மில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் இங்கு மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி நோன்பிருப்பதாக உடல்நலப்பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான மசேன் அல்டருடி தெரிவித்துள்ளார். டைப்-2 வகை நோயுடையவர்கள் விரதம் இருக்கும்போது, இரத்த சர்க்கரை அளவு குறைந்தாலோ, சரியான நேரத்தில் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலோ பாதிக்கப்படுவார்கள். அத்தகைய சமயங்களில் அவர்கள் மருத்துவர்களை நாடவேண்டும் என்றும் அவர் எச்சரிக்கின்றார். அதுமட்டுமின்றி, புகை பழக்கத்தைத் தவிர்த்தல், ஆரோக்கியமான சமச்சீர் உணவுகள், தகுந்த மருத்துவ பரிசோதனைகள், விரதத்திற்குப்பின் அதிக நீர்ச்சத்துள்ள பானங்களை எடுத்துக் கொள்வது போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். 

நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்கள் நோன்பினை மேற்கொள்ளுவது அவசியமில்லை என்ற நிலையிலும், பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய உடல்நிலையையும் மீறி நோன்பினைக் கடைப்பிடிக்கின்றனர். அபுதாபியைச் சேர்ந்த முகமது ஷாம்ராஸ் என்ற 23 வயது வாலிபர், 11 வயது முதலே டைப்-1 வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இந்த நோன்பானது தனது குறைபாட்டை எளிதாகச் சமாளிக்க உதவுகின்றது என்று அவர் கூறினார். மூதாதையர்களால் தனக்கும், தன்னுடைய சகோதரிக்கும் இந்த நோய் வந்ததாகக் கூறும் 28 வயதான சுஹைல், தன்னால் நோன்பு இருக்கமுடியும்போது, தனது சகோதரி மிகவும் களைத்துவிடுவதாகக் கூறினார். அதனால் அவர் சமீபகாலமாக நோன்பினை மேற்கொள்ளுவதில்லை என்றும் சுஹைல் தெரிவித்தார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1