வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: மனைவி கண் எதிரே கணவர் பலி!
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே முகமது பட்டினத்தை சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது47). விவசாயி. இவரது மனைவி மல்லிகா (38).நேற்று இருவரும் வேலைக்காக கிருஷ்ணாபுரம் சென்றனர். வேலை முடிந்த பின்பு அங்கிருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினார்கள். ஆத்தூர் என்ற இடத்தில் வரும் போது எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் அர்ஜூனன் மீது மோதியது.
இதில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த அர்ஜூனன் மனைவி கண் எதிரிலேயே பரிதாபமாக பலியானார். மல்லிகா படுகாயம் அடைந்தார். அதைப்போன்று அவர்கள் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் சார்வயல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் கைகளத்தூர் போலீசார் சம்பவம் இடம் சென்று இறந்த அர்ஜூனன் உடலை கைப்பற்றினார்கள். படுகாயம் அடைந்த 2 பேரை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Category: மாவட்ட செய்தி
0 comments