வி.களத்தூரில் அரசு பள்ளியில் விழாமேடை கலெக்டர் திறந்து வைத்தார்! தினகரன் செய்தி!
இன்றைய தினகரன் நாளிதழில் வந்த நமதூர் செய்தி!
பெரம்பலூர். செப்.6:
வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி விழாமே டையை கலெக்டர் தரேஸ் அகமது திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுமான் ஷெரீப், ஆஷியாபீவி ஆகியோரது மகள் சபியா பீவி (16). வி.களத்தூரிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்துவந்த இவர் கடந்த ஆண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தபோது நடந்த சாலை விபத்தில் பலியானார். அவரது நினைவாக, பொது மக்களின் பங்களிப்புத் தொகையுடன், பள்ளிக்கான விழாமேடை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சபியா பீவியின் பெற்றோர் தரப்பில் ரூ. 1.50 லட்சமும், அரசு நிதியுதவியுடன் மீதித்தொகையென மொத்தம் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் விழாமேடை பள்ளி வளாகத்திலேயே அமைக்கப்பட்டது.
மக்கள் பங்களிப்புடன் தன்னிறைவுத் திட்டத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட விழாமேடைக்கான திறப்புவிழா நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகாலிங்கம் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் தரேஸ் அகமது தலைமைவகித்து, விழா மேடையைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில், மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பாலு, ஊராட்சிமன்றத் தலைவர் நூருல்ஹீதா இஸ்மாயில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், தங்கராஜ் மற்றும் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் மணி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.

Category: உள்ளுர் செய்தி
0 comments