ரமலான் நோன்பிருக்கும் கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள்: பஞ்சாப் அரசு உத்தரவு!
அமிர்தசரஸ், ஜூலை 2-
ரமலான் நோன்பை முன்னிட்டு சிறைக்குள் நோன்பு நோற்கும் கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குமாறு பஞ்சாப் சிறைத்துறை மந்திரி சோஹன் சிங் தண்டால் உத்தரவிட்டுள்ளார்.
நோன்பிருக்கும் முஸ்லிம் கைதிகளுக்கு பால், பழம் மற்றும் தேவையான தின்பண்டங்களை தேவையான அளவு வழங்குமாறு மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளின் சூப்பிரண்ட்களுக்கும் உத்தரவிட்ட அவர், சமைக்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக டாக்டர்கள் திருப்தி தெரிவித்த பின்னரே அவை கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Category: மாநில செய்தி
0 comments