பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

புதுடெல்லி,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.69 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
Category: மாநில செய்தி
0 comments