.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்திய பல்கலைக்கழகங்களின் தரம் குறைகிறதா?

Unknown | 7:30 PM | 0 comments

புதுடெல்லி, பிப். 21-

இந்தியாவிலுள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 89 சதவீதம் சராசரி அல்லது சராசரிக்கும் கீழே தரப்படுத்தப்பட்டிருப்பது இந்தியாவில் கல்வியின் தரம் குறைகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

இந்தியாவி்ன் முதல் தர பல்கலைக்கழகங்கள் உலக அளவில் 226-250 வது இடங்களில் பின்தங்கியுள்ளது. உயர்கல்வியை பொறுத்தவரை 90 சதவீத கல்லூரிகள் சராசரி தரம் அல்லது சராசரி தரத்திற்கும் கீழேயே உள்ளன. மொத்தம் உள்ள 630 பல்கலைக்கழகங்களில் 179ம், 33 ஆயிரம் கல்லூரிகளில் 5,224 மட்டுமே முறையான அங்கீகாரம் பெற்றுள்ளன. வெறும் 11 சதவீத கல்வி நிறுவனங்கள் மட்டுமே “ஏ” கிரேடு பெற்றுள்ளது. மீதமுள்ள 71 சதவீத கல்வி நிறுவனங்கள் “பி” கிரேடும், 18 சதவீத கல்வி நிறுவனங்கள் குறைந்த தரத்தை குறிக்கும் “சி” கிரேடையும் பெற்றுள்ளது. 30 சதவீதத்திற்கும் குறைவான பல்கலைக்கழகங்களே முறையான அங்கீகாரம் பெற்றுள்ளன. நடப்பு ஆண்டு முதல் கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெறுவதை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபற்றி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவின் இயக்குனர் ஏ.என் ராய் கூறும்போது, “பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அரசால் நடத்தப்படுபவையாக உள்ளன. அங்கு போதுமான நிதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதே குறைவான மதிப்பீட்டை பெறுவதற்கு காரணமாக உள்ளது. கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த இன்னும் நிறைய தரமேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இல்லையென்றால் இன்னும் மோசமாகிவிடும். இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.   
சமீபத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்று கூட இடம்பெறாதது குறித்து கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1