பெரம்பலூர் மாவட்டத்தில் மனம் திருந்திய 7 பேருக்கு கறவை மாடுகள்
கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 7 நபர்களுக்கு ரூ. 2.10 லட்சத்தில் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய நபர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசு சார்பில், கலால்துறை மூலம் கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 7 நபர்களுக்கு மறுவாழ்வு உதவியாக தலா ரூ. 30 ஆயிரம் வீதம், ரூ. 2.10 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், கலால் உதவி ஆணையர் சூரியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Category:


0 comments