.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஐ.ஐ.எப்.டி.,யில் இடம் பிடிப்பது சாதாரண விஷயமல்ல!

Unknown | 10:07 PM | 0 comments

வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில்(..எப்.டி),எம்.பி..(சர்வதேச வணிகம்படிப்பில் இடம் பிடிப்பதென்பதுஇந்தியாவின் முக்கிய வணிகப் பள்ளிகளில் இடம் பிடிப்பதைவிட கடினம் என்று கூறப்படுகிறது.
IIFT நுழைவுத்தேர்வு கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடைபெற்றது. அந்த தேர்வை நீங்கள் எழுதியிருந்தால்அத்தேர்வுக்கான IIFT 2013 analysis and Answer Keys உள்ளிட்டவைகளை வைத்துஉங்களின் தேர்வு செயல்பாடு குறித்துநேர்மையான ஆய்வு செய்ய வேண்டும்மேலும்அடுத்த சுற்று தேர்வு செயல்பாட்டிற்கு தயாராக வேண்டிய நேரமிது.
வளாகங்கள்
இக்கல்வி நிறுவனத்தின் வளாகங்கள்டில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ளனஅதிகபட்ச மதிப்பெண் பெற்றவர்கள் டில்லி வளாகத்திலும்அடுத்த நிலையில் உள்ளவர்கள் கொல்கத்தா வளாகத்திலும் சேர்க்கைப் பெறுவார்கள்.
IIFT சேர்க்கை தொடர்பாக ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் என்னவெனில்அக்கல்வி நிறுவனத்தின் இடங்கள்கட்டணம்கட்-ஆப்மதிப்பெண் வழங்கும் செயல்பாடுதேர்வு செய்யும் செயல்பாடு மற்றும் மாற்ற விகிதாச்சாரம் போன்றவைதான்.
இடங்கள்
IIFT -ல் மொத்தம் 312 இடங்கள் உள்ளன. 2013 - 15ம் கல்வியாண்டில் 235 மாணவர்கள் டில்லி வளாகத்திற்கும், 77 மாணவர்கள் கொல்கத்தா வளாகத்திற்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்டணம்
இக்கல்வி நிறுவனத்தில், MBA (IB) படிப்பில், 2013-15ம் ஆண்டு Academic year -க்கான ஓராண்டு கட்டணம் ரூ.6,37,500. அதேசமயம், 2014-16ம் ஆண்டுகளுக்கான கட்டணத்தில் மாறுபாடு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதுகுறித்த இறுதி தகவல், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் அனுப்பப்படும் offer letters -ல் தெரிவிக்கப்படும்.
2013 கட்-ஆப்
2014ம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் கட்-ஆப் 50+ மதிப்பெண்கள்கடந்த 2013ம் ஆண்டில் மொத்த மதிப்பெண் 100 -ஆக இருந்ததுகடந்த ஆண்டை ஒப்பிடும்போதுஇந்தாண்டு pattern -ம் தொடர்புடையதாக இருப்பதால்கட்-ஆப் மதிப்பெண்ணும் ஏறக்குறைய அதேயளவிற்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுமேலும்பகுதிவாரியான(sectionalகட்-ஆப் மதிப்பெண்ணும் உண்டு.
மதிப்பெண் வழங்கும் செயல்முறை
கடந்தாண்டின் மதிப்பெண் வழங்கும் செயல்முறையில் சில வேறுபட்ட அம்சங்கள் பயன்படுத்தப்பட்டது.ஆனால், negative marking திட்டம்சீரான ஒன்றாகும்அதாவதுஒதுக்கப்பட்ட மதிப்பெண்களில் 3ல் பங்கு.கீழ்கண்ட அட்டவணையில் அதுகுறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன.
AREA
MARS PER QUESTION
NUMBER OF QUESTIONS
Quantitative Ability
1
25
Data Interpretation
1
19
Verbal Ability
0.75
20
Reading Comprehension
0.75
16
Logical Reasoning
0.75
20
General Awareness
0.50
28
TOTAL
100
128
தேர்வுசெய்யும் நடைமுறை
கட்-ஆப் மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில்மாணவர்கள் shortlist செய்யப்படுவார்கள்.Shortlist செய்யப்பட்டவர்கள்ஒரு தெளிவான நோக்க அறிக்கை(statement of purposeஎழுத வேண்டும்.அதன்மூலம்அவரின் திறன் மற்றும் தன்மை மற்றும் அவர் ஏன் MBA (IB) படிப்பை தேர்வு செய்தார் என்பது அறிந்துகொள்ளப்படும்.
Shortlist செய்யப்பட்டவர்கள்குழு கலந்தாய்வுநேர்முகத் தேர்வு மற்றும் கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட படிகளை கடக்க வேண்டும்பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்தே தலைப்புகள் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
உதாரணமாக கூறவேண்டுமெனில்கடந்த 2013ம் ஆண்டில்கட்டுரைக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வரமாசாபமா?" என்றும்குழு கலந்தாய்வுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று "ஒருவரை பணிக்கு அமர்த்துவோர்எதற்கு அதிக வெயிட்டேஜ் கொடுக்க வேண்டும்?அவரின் MBA பட்டத்திற்கா அல்லது தனிப்பட்ட திறனுக்கா?". இந்தப் பகுதியில்இதுபோன்ற கேள்விகளைத்தான் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கட்டுரை எழுதும் பகுதிக்கு மொத்தம் 20 நிமிடங்கள் ஒதுக்கப்படும்சராசரியான 300 வார்த்தைகளில் ஒருவர் கட்டுரை எழுத வேண்டும்கட்டுரைப் பகுதி முடிந்தவுடன்குழு கலந்தாய்வுப் பகுதி தொடங்கும்.
குழு கலந்தாய்வை நடத்துவதற்கு, IIFT, நல்ல அமைப்பாக்கப்பட்ட ஒரு வழிமுறையை கையாள்கிறது.ஒவ்வொருவருக்கும்தனது கருத்துக்களை சொல்ல தலா நிமிடங்கள் வழங்கப்படும்குழு கலந்தாய்வின்போதுஏதேனும் ஒருவர் நடுவராக செயலாற்றும்படி கேட்டுக் கொள்ளப்படலாம்.
கலந்துரையாடலின் முடிவில்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும்ஒட்டுமொத்த கலந்துரையாடலின் கருத்துக்களையும் சுருக்கி கூறும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்குழு கலந்தாய்வின் நேரம், குறைந்தபட்சம்75 நிமிடம் முதல் அதிகபட்சம் மணிநேரம் வரை இருக்கலாம்.
நோக்க அறிக்கையுடன் நீங்கள் சமர்ப்பிக்கும் படிவத்தின் அடிப்படையில்தான்உங்களின் நேர்முகத் தேர்வின் அம்சங்கள் அமைந்திருக்கும்அந்தப் படிவம் மற்றும் அறிக்கையின் படியேபெரும்பாலான கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வுக்கான உத்தேச நேரம் 20 நிமிடங்கள்.
கடுமையான போட்டி
ஒவ்வொரு ஆண்டும், 312 இடங்களை நிரப்புவதற்குசுமார் 1,000 மாணவர்கள் shortlist செய்யப்படுகிறார்கள்.கடந்தாண்டு, 975 மாணவர்கள் shortlist செய்யப்பட்டனர். இவற்றில் 235 இடங்கள் டில்லியிலும், 77 இடங்கள் கொல்கத்தாவிலும் உள்ளன. IIFT தேர்வை சுமார் 50,000 பேர் வரை எழுதுகின்றனர்இதன்மூலம்இக்கல்வி நிறுவனத்தில் இடம்பிடிக்கஎவ்வளவு போட்டிகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வெயிட்டேஜ் விபரங்கள்

PARAMETER
WEIGHT
IIFT 2013 score
65%
Essay
10%
GD
10%
PI
15%

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1