பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ராட்ச தேன் கூடுகளை அகற்ற அரசு அலுவலர்கள் கோரிக்கை!
பெரம்பலூர், ஜன. 24:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கட்டிடச் சுவரில் கொடிய விஷமுடைய ராட்சத தேனீக்கள் கட்டியுள்ள தேன் கூடுகளை அகற்ற வேண்டும் என்று அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக அடுக்கு மாடிக் கட்டிடச் சுவரில் ராட்சத மலைத் தேனீக்கள் 3 அடி உயரத்துக்கு தேன் கூடுகள் கட்டி உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு ஈயும், ஒரு விரல் தடிமனுக்கு பெரிதாக உள்ளது. இந்த தேனீக்கள் அடிக்கடி அலுவலகங்களுக்குள் பறந்து சென்று அலுவலர்களை அச்சுறுத்தி வருகின்றன. வருகின்றனர். எனவே, இந்த தேன் கூட்டை தீப்பந்தம் கொண்டுஅகற்றி அப்புறப்படுத்த வேண் டும் என அரசுத் துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments