பெரம்பலூரில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்!
பெரம்பலூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி¢ மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது, தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியும், பல்வேறு நலத்திட்டங்கள் வேண்டியும் 345 மனுக்கள் பெறப்பட் டன.
சான்றிதழ்
அதனை தொடர்ந்து புது வாழ்வு திட்டத்தின் மூலம் கிராமபுற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆலத்தூர், வேப்பூர் மற்றும் வேப்பந் தட்டை ஒன்றியங்களுக்குட் பட்ட 81 இளைஞர்களுக்கு வெல்டிங், ஜே.சி.பி. ஆப் ரேட்டர், கணினி பயிற்சி மற்றும் ஓட்டுநர் பயிற்சி அளிக் கப்பட்டது. அதன் அடிப் படையில் 27நபர்களுக்கு வெல்டிங் பயிற்சி முடித்த தற்கான சான்றிதழ் களையும், 16 நபர்களுக்கு ஜே.சி.பி. ஆப்ரேட்டர் பயிற்சி முடித்த தற்கான சான்றிதழ் களையும், 6 நபர்களுக்கு கணினி பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் களையும், மற்றும் 32 நபர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் களையும் மொத்தம் 81 இளை ஞர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் சான்றிதழ் களை கலெக்டர் வழங்கி னார்.
பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டுகோள்
மேலும் தனியார் நிறு வனங்களில் மேற்குறிப் பிட்ட பிரிவுகளில் பணி புரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட கலெக்டர் இம்மாதத் தில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் தொடங் கப்படவுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்¢¢ பழுது நீக்கம், எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தையோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள புதுவாழ்வு திட்ட அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிர மணியன், இந்திய வெளியுற வுப்பணி அலுவலர் (பயிற்சி) கண்ணன், புதுவாழ்வு திட்ட மேலாளர் சுதாதேவி உட்பட அனைத்துத்துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments