ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானத்தின் கண்ணாடி தரையிறங்கும் போது மீண்டும் நொறுங்கியது
புதுடெல்லி, நவ.5.
ட்ரீம்லைனர் விமானங்களில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுவதாக இந்த சம்பவமும் நடந்துள்ளது. டெல்லியிலிருந்து மெல்போர்ன் வழியாக சிட்னி வரை செல்லும் ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானமான ஏஐ-311, 80 பயணிகளுடனும், 12 ஊழியர்களுடனும் இன்று மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் முன்புறக்கண்ணாடி சிதறி விழுந்துள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் அதிகாரியான மது சி.மதேன் இந்த செய்தியை தெரிவித்துள்ளார். இதற்கான மாற்றுக் கண்ணாடி நாளை வரும் விமானத்தில் கொண்டுவரப்பட்டு பொருத்தப்படும் என்றும் அதன்பின்னர் விமானம் பயணத்திற்குத் தயாராகிவிடும் என்றும் அவர் கூறினார். இன்று சிட்னி செல்ல வேண்டிய பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தினால் மெல்போர்னில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்ணாடி பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு தடிமனாகவும் இருப்பதால் இதனால் எந்த பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இதற்கான மாற்றுக் கண்ணாடியும், அதனைப் பொருத்துவதற்கான தொழில்நுட்ப பொறியாளர்களும் ஏஐ-302 விமானத்தில் செல்ல இருப்பதாகவும் அதிகாரிகளுள் ஒருவர் தெரிவித்தார். பறக்கும்போதே இந்தக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சில அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, இதுகுறித்த விசாரணையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் வெளிப்புறத்தில் ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றங்கள் கூட இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான காரணம் விசாரணைக்குப் பின்னர் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Category: மாநில செய்தி
0 comments