.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மங்கள்யான் செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்ட‍து. இஸ்ரோ அறிவிப்பு – வீடியோ

Unknown | 7:00 PM | 0 comments

இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த் துக் கொண்டிருந் த இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பி. எஸ்.எல். வி. சி-25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இரு ந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணி ல் ஏவப்பட்டது.
அந்த 45 நிமிடங்கள்:
 
விண்கலம் சரியாக 2.38 மணிக்கு ஏவப்பட் டாலும், விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட சரி யான பாதையில் சென்று கொண்டிருக்கிற து. இன்னும் 45 நிமிடங்களுக்குப் பின்னரே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதாக அறிவிக்க முடியும் என மங்கள்யான் ஏவப்ப ட்டது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி கூறியி ருந்தார்.
விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்வெளிப் பாதையில் நிலைநிறுத்தப்பட அரை மணி நேரம் இருந்த நிலையில், இஸ்ரோ தலைவ ர் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட விஞ்ஞா னிகள் பலரும் மங்கள்யான் பயணத்தை உற்று கவனித்து வந்தனர்.
மங்கள்யான் விண்கலம் வெற்றி கரமாக நான்காவது படிநிலை யை அடைந்ததுமே இஸ்ரோ வி ஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரத் தில் ஒருவரை ஒருவர் வாழ்த்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட னர்.
புவி வட்டப்பாதையில்…
பின்னர் பேசிய இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன், மிகவும் கடின மான, சிக்கலான சவாலை இஸ்ரோ சாதித்துள்ளதாக தெரிவித்தார். மே லும் மங்கள்யான் விண் கலம் புவி வட்டப்பாதையை அடைந்ததாக இஸ் ரோ தலைவர் அறிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, “மங்கள் யான் முயற்சியின் முதல்படி வெற் றிகரமாக அமைந்ததற்கு உறுதுணை யாக இருந்த அனைவரு க்கும் நன்றி” என்றார்.
பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து:
இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ண னை தொலைபேசியில் தொடர்பு கொ ண்ட பிரதமர் மன்மோகன்சிங், மங்கள் யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்திய விஞ்ஞானிகள் குழு வுக்கு வாழ்த்துகளைத் தெரி வித்தார்.
‘மங்கல்யான் பயணம்’:
 
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்ப ட்டுள்ள இந்த விண்கலம் அங்கு மீத் தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்யும். அதோடு அங்குள்ள தாது வளங்களையும் கண்டறியும். 1,350 கிலோ எடை கொண்ட இந்த விண்க லத்தில் அதற்கான அதிநவீன கருவி களும், கேமராக்களும் பொ ருத்தப்பட்டுள்ளன.
மங்கள்யான் விண்கலம் புவிவட்டப் பாதையில் ஒரு மாத காலம் பய ணம் செய்யும். அதன்பிறகு புவி சுற்று வட் டப் பாதையில் இருந்து விடுவிக்கப் பட்டு செவ்வாய் கிரக பாதைக்கு செலுத்தப்படும். அடுத்த ஆண்டு செப் டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற் றுப்பாதையில் நிலைநிறுத் தப்பட்டு பின்னர் அதைச் சுற்றிவந்து ஆய்வுசெய்யும்.
56 மணி நேர கவுன்டவுன்:
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப் பட்டுள்ள ‘மங்கள்யான்’ விண்கல த்துடன் பிஎஸ்எல்வி சி-25 ராக் கெட்டை ஏவுவதற்கான 56 மணி நேரம் 30 நிமிடம் கவுன்டவுன் கடந்த 3-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6.08 மணிக்கு தொடங்கியது.
கனவு நனவாகிறது:
செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்கு த் தன் சொந்த முயற்சியில் மங்க ள்யான் செயற்கைக்கோளை ஏவி யுள்ளது இந்தியா. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் தனது சொந் த முயற்சியில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதை க்கு செயற்கைக்கோளை அனுப்பிய 2 ஆவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். இது இந்தியாவின் நீண்டகாலக் கனவு.
மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் கடந்து வந்த பாதை:
2012 ஆம் ஆண்டு சுதந்திர தின உரை யில் பிரதமர் மன்மோகன் சிங், செவ் வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோ ளை ஏவும் இந்தியாவின் முயற் சி 2013-இல் நனவாகும் என அதிகா ரபூர்வமாக அறிவித்தார். “அறிவியல் தொழில்நுட்பத்தில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும்” என்றார் அவ ர்.
இந்தத் திட்டத்தை மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் என இஸ்ரோ குறிப்பிடுகி றது. ரூ.450 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில் 500 விஞ்ஞானிகள் ஈடுப ட்டுள்ளனர். 1,350 கிலோ எடையுடைய மங்கள்யான், ஏவப்பட்ட பின் 25 நாள்கள் புவிசுற்றுப்பாதையில் இருந்தபடி, செவ்வாய் நோக்கிய பயண த்துக்கான எரிசக்தியைச் சேமித்த பிறகு, நவம்பர் 30 ஆம் தேதி பயணத் தைத் தொடங்கி, 9 மாதங்களுக்குப் பின் செவ்வாய் சுற்றுப்பாதையை அடையும்.
மங்கள்யான் செவ்வாயின் மேற்பரப்பில் இறங்கப்போவதில்லை. அத ன் சுற்றுப்பாதையில் மிதந்தபடி இதுவரை அறியப்படாத செவ்வாய் கிர கத் தகவல்களைச் சேகரிக்கும். 15 கிலோ எடையுள்ள மங்கள்யான், லைமன் ஆல்பா போட்டோமீட்டர் உள்பட 5 உபகரணங்க ளைக் கொண் டிருக்கிறது.
அதில் ஒன்று மீத்தேன் வாயுவைக் கண்ட றியும். மற்றொன்று ஹைட்ர ஜன் மூலம் செவ்வாயின் மேல்மண்டல வெளியேற்ற முறைகளை ஆய்வு செய்யும். செவ்வாய் கிரகத்திலுள்ள தாது வளத்தை தெர்மல் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆய்வு செய்யும்.
 
செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருப் பதைக் கண்டறிவதுதான் மங்கள்யா னின் முக்கிய நோக்கமாக இருக்கும். ஏனெனில் கரியமில வாயு சார்ந்த மீத் தேனின் இருப்பு, உயிரின இருப்புக்கா ன ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது . 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1