முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் திருச்சி ஷரீஅத்‘ மாநாட்டில் தீர்மானம்!
திருச்சி, நவ.5-
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை சட்டமாக்கி முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று திருச்சியில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு
திருச்சி மாநகர, மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ‘ஷரீஅத்‘ மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். வரவேற்பு குழு செயலாளர் உமர்பாரூக் வரவேற்றார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
முஸ்லிம் தனி சட்டப்படி (ஷரீ அத்) நடைபெறும் திருமணம் மற்றும் மணமுறிவு போன்ற நிகழ்வுகள் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருவதால் இதற்காக வழங்கப்படும் சான்றுகளை நீதிமன்றங்களும், அரசு அலுவலகங்களும் ஏற்றுக்கொள்ளும் வழக்கம் தொன்று தொட்டு நடைமுறையில் இருப்பதால் மத்திய-மாநில அரசுகள் இதனை சட்டப்பூர்வமான சான்றுகளே என அறிவிக்க வேண்டும். முஸ்லிம் திருமணங்களை விசேஷ திருமண சட்டப்படி பதிவு செய்தே ஆகவேண்டும் என முஸ்லிம்களை நிர்ப்பந்திக்க கூடாது என மாவட்ட பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்குமாறு மாநில அரசை கேட்டுக்கொள்வது.
10 சதவீத இட ஒதுக்கீடு
இந்தியாவில் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்கள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளில் மிகவும் பின் தங்கி உள்ளார்கள் என்ற ஆய்வின் அடிப்படையில் முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என பரிந்துரை செய்து உள்ளதை சட்டமாக்கி சிறுபான்மை மக்களுக்கு சமூக நீதி வழங்கவேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகள் கண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும், கொடூர குற்றவாளிகள் இந்த உலகில் இருந்து களையப்படவேண்டும் என்பதில் மாறுபாடு இல்லை. ஆனால் எந்த வித குற்றங்களும் செய்யாமல் பல்வேறு சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
திருச்சி மாணவி வழக்கு
திருச்சி மாணவி தவ்பிக் சுல்தானா கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். உலமாக்கள் மாத ஓய்வூதியத்தை ரூ.1000-ல் இருந்து உயர்த்தி ரூ.2ஆயிரமாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாருல்லா எம்.எல்.ஏ, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் ஆகியோர் பேசினார்கள். தலைமை இமாம் ஜமீலுர் ரகுமான், முகமது அலீமுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் ஹாசீம், சையது ஜாபர், மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த இப்ராகிம்ஷா, பைஸ் அகமது உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Category: சமுதாய செய்தி
0 comments