பெரம்பலுர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரி மழையளவு இருக்குமா?விவசாயிகள் கவலை!
பெரம்பலூர்,நவ,5:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்யுமா என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 908 மிமீ ஆகும். இதில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மழையாக 28மிமீ மழையும், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3மாதங்களில் கோடைகால மழையாக 91 மிமீ மழையும், ஜுன், ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 4 மாதங்களில் தென்மேற்குப் பருவமழையாக 314மிமீ மழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையாக 475மிமீ மழையும் என சேர்த்து 12மாதங்களில் 908மிமீ மழைபெய்யும்.
2013ம்ஆண்டில் ஜனவரி 1ம்தேதிதொடங்கி அக்டோபர் 15ம் தேதிவரை 531.56மிமீ அளவுக்கு மழை பெய்திருந்தது. 2012ல் இதேதேதிவரை 385.90மிமீ மழை மட்டுமே பெய்திருந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தஆண்டு மழையளவு அதிகரித்திருப்பதற்கு காரணம், தென்மேற்குப் பருவமழை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தஆண்டு கூடுதலாக பெய்ததேயாகும். பொதுவாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஜுன், ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பெய்கிற தென்மேற்குப் பருவமழையின் சராசரிஅளவு 314 ஆக இருக்கும்போது, நடப்பாண்டு 412.20மிமீ அளவிற்குத் தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளது.
இதுவரை மொத்தம் 531.56மிமீ பெய்துவிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை சராசரியாக 475 மிமீ பெய்யவேண்டும். இந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதத்தில் கடந்தமாதம் 21ம் தேதி தழுதாழையில் 130மிமீ மழையும், வெண்வாவூரில் 19மிமீ மழை யும், பெரம்பலூரில் 16 மிமீ மழையும், பாடாலூரில் 7மிமீ மழையும், செட்டிக்குளத்தில் 19மிமீமழையும் எனமாவட்டஅளவில் 5 மையங்களில் 191மிமீ மழைபதிவானது. மாவட்ட அளவில் சராசரியாக 38.20மிமீ பதிவானது. குறிப்பாக தழுதாழையில் 130மிமீ மழை, அதாவது 13செமீமழை பதிவானது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் குறிப்பிடும்படி மழைபெய்யவில்லை.
இதனால் கடந்த ஆண்டைப்போல வடகிழக்குப் பருவமழை இந்தஆண்டும் பொய்த்துவிடுமோ என விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்திலிருந்தனர். இதற்கு ஆறுதலாக நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை சீசன் தொடங் கியதுபோல, நாள்முழுக்க வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டு, பல இடங்களில் பரவலான மழைபொழிந்தது. வேகமான காற்றில்லாமல் மழைபெய்ததால் பொதுவான சேதங்கள் ஏற்படவில்லை. விவசாயத்திற்கு ஏற்றமழையாக இருந்தது. இந்து ஆண்டு பருவ மழை ஏமாற்றாமல் பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இது அடுத்த ஆண்டு விவசாயத்திற்கு பெரிதும் கைகொடுக்கும். எனவே சராசரி மழை அளவைவிட மழை பெய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதன்படி பெரம்பலூர் மற்றும் மலையோர கிராமங்களான அரும்பாவூர், பூலாம் பாடி, மேட்டூர், தொண்டமாந்துறை, மலையாளப்படி, கோரையாறு, கள்ளப்பட்டி, கடம் பூர், பெரியம்மாபாளையம், குரும்பலூர், பாளையம், லாடபுரம், கொளக்காநத்தம், டி.க ளத்தூர், லெப்பைக்குடிகாடு, வேப்பந்தட்டை, வி.களத்தூர் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்தது.
காய்ந்துகிடக்கும் ஏரி,குளங்கள்
எப்போதும் அக்டோபர் மாதத்தில், பொதுவாக மாவட்டத்திலுள்ள 70க்கும் மேற் பட்ட ஏரிகளில் பாதி அளவு தண்ணீராவது நிரம்பி காணப்படும். ஆனால் தற்போது நவம்பர் தொடங்கியபிறகும், 90 சதவீத ஏரிகள் தண்ணீரையே காணாத நிலை யிலுள்ளது. இதனால் ஏரிப்பாசன விவசாயிகள் ஏமாந்த நிலையில் உள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர்ப் பிரச்சனை இன்னும் தீராததால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments