பெரம்பலூர் மாவட்டத்தில்,பிற்படுத்தப்பட்டோர்க்கு தொழில் கடன் வழங்க ரூ. 2.50 கோடி இலக்கு: ஆட்சியர்!
பெரம்பலூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் ரூ. 2.50 கோடி தொழில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் பிற்படுத்தப்பட்டோர், மிவும் கப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த குறைந்த வட்டியில் காலக் கடன் வழங்கி வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2013- 2014-ம் நிதியாண்டுக்கு ரூ. 250 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சில்லறை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள், ஆட்டோ, கார், விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல், இயந்திர கலப்பை, கறவை மாடுகள், கைவினைஞர், மரபுவழிச் சார்ந்த தொழில்கள், இளம் தொழில் பட்டதாரிகள் திட்ட அறிக்கை சார்ந்த சுயதொழில் கடன் மற்றும் தொழிற்கல்வி பயில்வதற்கு கல்விக் கடன் உள்ளிட்ட
பிரிவுகளின் கீழ் கடனுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு கிராமப்புறங்களில் ரூ. 81000,- நகர்ப்புறங்களில்
ரூ. 1,03000-க்கு மிகாமலும், 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
தகுதியான நபர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில விண்ணப்பம் பெற்று, சாதி, வருமான சான்று, பிறப்பிடச் சான்று, குடும்ப அட்டை, முன்னணி நிறுவனத்தின் விலைப்புள்ளி, திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால்), ஓட்டுநர் உரிமம் (வாகனங்களுக்கு கடன் பெறுவதற்கு), வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவண நகல்களுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நவ. 20-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Category: மாவட்ட செய்தி


0 comments