.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளை, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளை ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்!

Unknown | 8:47 PM | 0 comments


பெரம்பலூர், நவ. 13:
பெரம்பலூர் மாவட்டத்தில் வெள்ளை, மஞ்சள் நிறமுடைய குடும்ப அட் டைகளை இணையதளத் தின் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று கலெ க்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2012 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி புழக்கத்திலிருந்த குடும்ப அட்டைகள் 2013 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை மேலும் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கும் வகையில், அவற்றில் 2013ம் ஆண்டிற்கான உள்தாள் இணைக்கும் பணி ஜனவரி 1 முதல் பிப்ரவரி 27 வரை நியாய விலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், மார்ச் 1 முதல் இப்பணி வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடை பெற்று வருகிறது. எந்தப் பொருளும் வேண்டாதோருக்கு வழங்கப்பட்ட வெள்ளை நிறமுடைய குடும்ப அட்டைகளும், இருப்பிட முகவரி ஆதாரத்திற்காக �தட்கல்�முறையில் வழங்கப்பட்டுள்ள மஞ்சள் நிறமுடைய குடும்ப அட்டைதாரர்களும் நியாய விலைக் கடையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவேண்டிய அவசியமில்லை என்பதால் அவர்கள் நியாய விலைக் கடைகளுக்கு வருவதில்லை.
இத்தகைய குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து அவர்களுடைய குடும்ப அட்டைக ளை காலநீட்டிப்பு செய்து வழங்குமாறு கோரிக்கைகள் பெறப்பட்டன. அவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு மேற்கூறிய குடும் பஅட்டைதாரர்கள் அவர்களுடைய குடும்ப அட்டை களை இணையதளம் மூலமாக 2013, 2014ம் ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
எனவே, அரசாணைப் படி மேற்கூறிய குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய குடும்ப அட்டை களை புதுப்பித்துக்கொள்வதற்கு ஏதுவாக இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இணையதள முகவரி
<லீttஜீ://210.212. 62.90:8080/ஸீமீஷ்யீநீஜீ/நீணீக்ஷீபீஸ்ணீறீவீபீவீtஹ்.பீஷீ>
ஆகும்.
இந்த இணையதள பக்கத்தில் மேற்கூறிய குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டைஎண்ணை பதிவுசெய்த பிறகு அவர்களுடைய குடும்ப அட்டைகளில் ஒட் டி பராமரிக்கும் விதமாக
ழி
வகை குடும்ப அட்டை காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு கணினியில் அச்சடித்து அளிக்கப்படும். இதனை மேற்கூறிய குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டைகளில் ஒட்டிக்கொள்ள வேண்டும். இத்தகைய காலநீட்டிப்பு பதிவுச்சீட்டு ஒட்டப்பட்டுள்ள
ழி
வகை குடும்ப அட்டைகள் புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளாகக் கருதப்படும்.
இணையதள வசதியை பயன்படுத்த இயலாத குடும்ப அட்டைதாரர்கள் உணவக பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் மாதந்தோறும் நடத் தப்படும் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டத்தில் தங்களுடைய குடும்ப அட்டை களை புதுப்பித்துக் கொள் ளலாம். மேற்கூறிய வசதிகள் 2014 ஜனவரி 31ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
எனவே, மேற்கூறிய குடும்ப அட்டைதாரர்கள் இந்த வசதிகளை முறை யாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் கலெக்டர்.


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1