.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்குரூ.1.10 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்!

Unknown | 7:46 PM | 0 comments

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் துறை சார்பில் 3,237 பேருக்கு ரூ. 1.10 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், 2011 முதல் 2013 வரை 3,237 பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் ரூ. 1 கோடியே 10 லட்சத்து 86 ஆயிரத்து 630 மதிப்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 170 நபர்களுக்கு ரூ. 4.42 லட்சத்திலான சலவைப் பெட்டி, 127 நபர்களுக்கு ரூ. 4.57 லட்சத்தில் தையல் இயந்திரங்கள், 125 உலமாக்களுக்கு ரூ. 4.50 லட்சத்தில் சைக்கிள்கள், ஒருவருக்கு ரூ. 5,200 மதிப்பிலான எம்பிராய்டரி தையல் எந்திரம், 122 நரிக்குறவர்களுக்கு ரூ. 9.15 லட்சத்தில் தொழில் தொடங்க மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.    
பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 603 மாணவர்களுக்கு தலா ரூ. 3,315 வீதம் ரூ. 19 லட்சத்து 98 ஆயிரத்து 945 மதிப்பிலும், 735 மாணவிகளுக்கு தலா ரூ. 3,230 வீதம் ரூ. 23 லட்சத்து 74 ஆயிரத்து 50 மதிப்பிலும் என 1,338 பேருக்கு ரூ. 43 லட்சத்து 72 ஆயிரத்து 995 மதிப்பிலான சைக்கிள்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், 639 மாணவர்களுக்கு தலா ரூ. 3,315 வீதம் ரூ. 21 லட்சத்து 18 ஆயிரத்து 285 மதிப்பிலும், 715 மாணவிகளுக்கு தலா ரூ. 3,230 வீதம் ரூ. 23 லட்சத்து 9 ஆயிரத்து 450 மதிப்பிலும் என 1,354 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 44 லட்சத்து 27 ஆயிரத்து 735 மதிப்பிலான சைக்கிள்களும் வழங்கப்பட்டுள்ளன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1