பெரம்பலூரில் பெருகி வரும் கொள்ளை சம்பவங்கள்: போதிய போலீசார் இன்றி தடுமாறும் காவல்துறை

பெரம்பலூர்,
பெரம்பலூரில் பெருகி வரும் கொள்ளை சம் பவங்களை தடுக்க ஆட் கள் இன்றி போலீசார் பற்றாக்குறையால் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் தடுமாறி வருகிறது.
2 நாட்களுக்கு ஒரு முறை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்கள், வழிப்பறி சம்பவங்கள், வீடு புகுந்து திருடி செல்லும் சம் பவங்கள் அதிகரித்துள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை திருட்டு குற்றங்கள் நடந்துவருகிறது.
குற்றப்பிரிவு இல்லை
பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு பணியில் அமர்த்தப்பட்ட பிரிட்டிஷ் காலத்திய எண்ணிக்கை யிலேயே போலீசார் உள்ளனர். இவர்களால் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் இயலவில்லை.
போக்குவரத்து நெரிசல்
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல் தெரு. சூப்பர் பஜார்தெரு ஆகியவற்றில் பகலில் எந்தநேரமும் லாரிகளை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கின் றனர். காமராஜர் வளைவு, வடக்கு மாதவி சாலையில் இருபுறமும் இருசக்கர வாகனங்களை அடைத்து நிறுத்திக்கொள்வ தால் வாகனங்கள் சென்றுவர முடியாமல் ‘பீக் ஹவர்” சமயத்தில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைபோக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்த தவறி வருகின்றனர்.
தொடர் சம்பவங்கள்
பெரம்பலூரில் ஓய்வுபெற்ற மருத்துவத்துறை இணை இயக்குனர், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் வீட்டில் நகை பறிப்பு, கடைவீதியில் நகைக் கடையில் கொள்ளை, கருவூலத்துறையை சேர்ந்த பெண் அதிகாரி வீட்டில் புகுந்து நகைகள் திருட்டு என சமீப காலத்தில் 7க்கும் மேற்பட்ட சம்பங்கள் நடந்து உள்ளது.
கார் கடத்தல் சம்பவங்கள்
பெரம்பலூரில் நிறைய கார் கடத்தில் சம்பவங்கள் நடந்துள்ளது. அவற்றில் 1 வழக்கில் மட்டும் துப்பு துலக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் கார் ஷோரூமில் ரொக்கம், கணினிகள் கொள்ளையடிக்கப்பட்டு 2 கார்கள் கடத்தி செல்லப் பட்டது. காரில் எரிபொருள் இல்லாததால் கொள்ளை யர்கள் கார்களை நகராட்சி வளாகத்தில் நிறுத்திவிட்டு பஸ்ஏறி தலைமறைவாகினர்.
பெரம்பலூரில் சிதம்பரம் நகரில் வசித்து வரும் ஓய்வுபெற்ற உதவி கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு வீட்டில் ஆம்னி கார் கடத்தி செல்லப்பட்டது. இவரது வீட்டின் முதல் தளத்தில் அமைந்துள்ள குடிநீர்வடிகால் வாரிய அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. அங்கு பணம், பொருட்கள் ஏதும் கிடைக்காததால் ஏமாற் றம் அடைந்த கொள்ளையர்கள் முன்னாள் கல்வி அதிகாரியின் வீட்டில் காரை திருடி சென் றனர். இதுபோல பல்வேறு சம்பவங்கள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் நடந்துவருகிறது.
தீ வைப்பு சம்பவங்கள்
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ஒரே நேரத்தில் தபால் நிலைய அதிகாரி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் அரசு போக்கு வரத்துக் கழக கண்டக்டர் தனியார் வாகன டிரைவர் வீடுகளில் கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைக்கப் பட்ட சம்பவத்தில் குற்ற வாளிகள் குறித்து இதுவரை எந்தவித தடயத்தையும் போலீசாரால் கண்டு பிடிக்கமுடியவில்லை.
கூடுதல் போலீஸ் நிலையம்
பெரம்பலூரில் கூடுதலாக தாலுகா போலீஸ்நிலையம் அமைத்து, தற்போதுள்ள போலீசாரின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் பெரம்பலூர் நகரம் கொள்ளையர்களின் புகலிடமாக மாறிவருவதை தடுக்க இயலாத இயலாத நிலையில் போலீஸ்துறை தடுமாறிவருகிறது.
குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் போதிய எண்ணிக்கையில் ஆட்கள் இல்லாத நிலையில் குறைந்த அளவு போலீஸ் அலுவலர் களும், காவலர்களும் அதிக பணிச்சுமையுடன் ரோந்து பணி சுமை மேற்கொண்டாலும் திருட்டு குற்றங்களை தடுக்க இயலவில்லை என்ற விரக்தி மனப்பான்மையில் பெரம்ப லூர் போலீசார் உள்ளனர். இதனை தவிர்க்க முதல் அமைச்சர் பெரம்பலூரில் தாலுகா போலீஸ்நிலையம், குற்றப்பிரிவு போலீஸ் பிரிவு, போக்குவரத்து போலீஸ் பிரிவு ஆகியவற்றை நிறுவிட வேண்டும் என்று பெரம்பலூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments