துபையில் நடைப்பெற்ற புஷ்ரா நல அறக்கட்டளையின் மே மாதத்திர பொதுக்கூட்டம் .
மே 11.துபாய் -தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று
இனிய இரவு 8மணிக்கு புஷ்ரா நல அறக்கட்டளையின் மே மாதத்திர பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது .
K. அப்துல் ஹக்கீம் தலைமையும் A. அப்துல் சலாம் மற்றும் A. ஷேக் தாவூத் முன்னிலையில் இந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது .
இதில் பெறும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்கள் .
இந்த மாதம் முதல் புதிதாக 3 உறுப்பினர்கள் இந்த அறக்கட்டளையில்
இணைந்தனர்கள் .
V .களத்தூரில் இருந்து திருமண உதவி கேட்டு வந்த கடிதம்
ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த திருமணத்திற்கு ஐந்து ஆயிரம் வழங்க
இந்த பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது .
ஜூலை மாதம் ரமழன் நோண்பு ஆரம்பம் ஆகிறது.இதற்கு நமது சுற்று வட்டார கிராமங்களில் கஞ்சி காச்சுவதற்கு பணம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது .மேலும் துபையில்
இருக்கும் V .களத்தூர் & மில்லத் நகர் மக்களிடம் அடுத்த மாதம் முதல்
இந்த திட்டம் பற்றி எடுத்து சொல்லி அவர்களின் உதவதியோடு
கூடுதல் பணம் அனுப்ப தீர்மானிக்கப் பட்டது .
Category: துபாய்
0 comments