சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பும் அபாயத்தில் 18 ஆயிரம் இந்தியர்கள்!

சவுதி அரேபியாவில் அந்நாட்டு அரசின் புதிய சட்டத்தால், வேலை இழந்து நாடு திரும்பும் அபாயத்தில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகவும், அவர்கள் இந்திய தூதரகத்தில் அவசரகால சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் மக்களவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க அந்நாட்டு அரசு, நிதகத் என்கிற புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதன்படி அங்குள்ள தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டினர் 10 பேரை பணி அமர்த்தினால் ஒரு சவுதி குடிமகனுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளதால் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டினர் வேலை இழக்கின்றனர். தற்போது 2 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களவையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, "சவுதியில் வேலை இழக்கும் இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். இதனால் 18 ஆயிரம் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவசரகால சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். நிதாகத் சட்டப்படி, விதிமுறைகள் பூர்த்தி ஆகாதவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும், என்று சவுதி அரேபிய அரசு பிரச்சாரம் செய்து வருகிறது.
இதனால் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர். சட்ட விரோதமாக பணியாற்றிவரும் இந்தியர்கள் மட்டுமின்றி, பல வெளிநாட்டினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்." என்று கூறினார்.

Category: வளைகுட செய்தி
0 comments