பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளீயீடு: நாமக்கல் மாணவர்கள் முதலிடம்!
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பிப்ரவரி 29ம் தேதி துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
இந்நிலையில், தேர்வுதாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 355 பேர். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 84.7 சதவீதம். மாணவிகள் 91 சதவீதம். இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ளனர். நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர்.
இரண்டாமிடம் இருவருக்கு: இதே போல், நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் பழனிராஜ், மற்றும் ஓசூர் ஸ்ரீ விஜய் வித் மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா ஆகியோர் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
மூன்றாம் இடத்தில் 9 பேர்: இந்த ஆண்டு மாநில அளவில் 9 பேர் 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். அவர்கள்
1) ராஜேஸ்வரி சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி கோசாகுளம், மேலூர், மதுரை
2) கலைவாணி குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
3) விஷ்ணுவர்த்தன் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
4) கண்மணி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
5) மனோதினி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல்
6) ரவீனா எஸ்,வி. மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
7) நிவேதிதா ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு
8) பூஜா எஸ். சங்கர் சுவாமி எம். மெட்ரிக் பள்ளி, போரூர், பொன்னேரி
9) முத்து மணிகண்டன் நாசரேத் மெட்ரிக் பள்ளி, ஆவடி, திருவள்ளூர்
தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களுக்கும் புஷ்ரா நல அறக்கட்டளை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
Category: கல்வி
0 comments