.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

விசுவக்குடி அணையை சுற்றுலா தலமாக்க ஏற்பாடு !கலெக்டர் தரேஸ்அகமது தகவல்!

Unknown | 2:23 PM | 0 comments



 விசுவக்குடி அணையை பிரதான சுற்றுலாத் தலமாக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கலெக்டர் தரேஸ்அகமது தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில், கல்லாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பாக, செம்மலை, பச்சைமலை ஆகியமலைகளை இணைத்து விசுவக்குடி அணைக்கட்டு அமைக்கும்பணி நடந்துவருகிறது. இந்த அணைக் கட்டுமூலம் கல்லாற்றுநீர் வீணாகாமல்தடுத்து விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் முதல்கட்ட பணியாக ரூ.19 கோடியில் 665 மீட்டர் நீளமுள்ள கரையுடன்கூடிய கட்டுமானப்பணிகள் நடந்துவருகிறது. இந்த அணைக்கட்டு மூலம் 30.67 மில்லியன் கனஅடி தண்ணீரை 10 மீட்டர் ஆழத்திற்கு சேமிக்க இயலும். இதற்காக அணையின் நீர்ப்போக்கியை அமைத்திட 11 மீட்டர் உயரத்திற்கு கான்கிரீட்டால் ஆன பலமான கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. நீர்போக்கியின் இருபுறமும் மலையுடன் இணைக்கும் வகையில் 12 மீட்டர் உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட்டு மண் அரிப்பு ஏற்படாதபடி கருங்கல் பதிக்கும் பணிகள் நடந்துவருகிறது.
அணைக்கட்டு அமைக்கும் பணிக்காக 2ம் கட்டமாக மறு மதிப்பீட்டின்படி ரூ14.07 கோடி நிதிகேட்டு தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய்நிலம் பாசன வசதிபெறும். மேலும் மதகுகளின் மூலம் வெங்கலம் பெரிய ஏரிக்கு கீழுள்ள சுமார் 421. 41ஏக்கர் ஆயக்கட்டிற்கான நீராதாரம் உறுதி செய்யப்படும்.நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப்பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதிபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். இந்த அணையை அன்னமங்கலம் வழியாக நேரில்வந்து பார்ப்பதற்காக விசுவக்குடியிலிருந்து 1.20கி.மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அணையின் திட்டப்பணிகளின்படி தேக்கப்படவுள்ள 30.67மில்லியன் கனஅடி நீருடன், உட்பகுதியில் ஆழப்படுத்துவதன்மூலம் மேலும் 10 மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையிலான கருத்துரு மாநில திட்டக்குழுவிற்கு மாவட்ட நிர்வாகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அணைக்கட்டு அமைக்கும் பணிகளில் ஷட்டர் மூலம் நீர் வெளியேற்றும் பகுதியில் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த பெரிய அளவிலான கற்கள் பொக்லைன் இயந்திரத்தால் நிரப்பும்பணிகள் நடைபெற்று வருவதையும், ஏரிக்காக 12 மீட்டர்உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கரைப்பகுதியில் நடந்துசென்று மலைப்பகுதி யை இயற்கை எழிலோடு காண்பதற்கும், நீர்வழிந்தோடுவதற்காகவும் அமைக்கப்பட் டுள்ள கான்கிரீட் கட்டுமான பணிகளையும் கலெக்டர் தரேஸ்அஹமது நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் கலெக்டர் பேசும்போது, பெரம் பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக இந்தஅணையை உருவாக்கும் வகை யில் அணையின் முன்புறத்தில் பிரமாண்ட பூங்காவும், அணையின் கரையில் பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகை அமைக்கவும், அணையைப் பார்க்க பொதுமக்கள் வரும் வகையில் தொண்டமாந்துறை வழியாக புதிதாக ஒருசாலை அமைத்திடவும் பொதுப் பணித்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1