பெரம்பலூரில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி!
![]() |
ஜெனிபாமாலினி. |
பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் குணா. இவரது மகள் ஜெனிபாமாலினி, 8, தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று மாலை, 5 மணியளவில், இப்பகுதியில் மழை பெய்தது. அப்போது மின்சார கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. பள்ளியிலிருந்து வீட்டு சென்று கொண்டிருந்த ஜெனிபாமாலினி, ரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால், சிறுமி மீது மின்சாரம் தாக்கியது. தகவலறிந்த உறவினர்கள் சிறுமி ஜெனிபாமாலினியை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜெனிபாமாலினி இறந்தார். விபத்து குறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments