உங்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க வைக்க இதை ஃபாலோ பன்னலாமே!
விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துறீங்களா, கொஞ்ச நாட்களுக்கு பின் கணினி ரொம்ப மெதுவாக இயங்குகிறதா. கணினியை கனிக்கவே முடியாதபடி திடீரென கோளாறு பன்னுதுங்களா, அதற்கு முக்கிய காரணம் உங்க கணினியை சரியாக கவனிக்காமல் விட்டது தான். ஆமாங்க சரியான இடைவெளியில் உங்க கணினியை பார்த்து கொள்ள வேண்டும். எப்படி பார்த்து கொல்வது என்று அடுத்து வரும் ஸ்லைடரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்டார்ட் அப் ப்ரோகிராம்
விண்டோஸில் புதிதாக மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் போது அதனுடன் சிறிய ப்ரோகிராமும் இன்ஸ்டால் ஆகும், இது நீங்க ஒவ்வொரு முறை சிஸ்டம் ஆன் செய்தாலும் இந்த ப்ரோகிராமும் சேர்த்து ஆன் ஆகும் இந்த சமயத்தில் கணினி மெதுவாக இயங்கும். இதை தவிர்க்க சிஸ்டம் கான்பிகரேஷன் – ஸ்டார்ட் அப் – தேவையான மென்பொருளை டீசெலக்ட் செய்தால் வேலை முடிந்தது.
பைல்
உங்க கணினியில் இருக்கும் தேவை இல்லாத பைல்களை அழித்து விடுங்கள், இதற்கு CCleaner மென்பொருளை பயன்படுத்தலாம்.
டிஸ்க் க்ளீன் அப்
உங்க கணினியில் இருக்கும் டிஸ்க் க்ளீன் அப் டூல் பழைய பைல்களை தானாக அழித்து கணினியை வேகமாக இயங்க வழிவகுக்கும். சீரான இடைவெளியில் டிஸ்க் க்ளீன் அப் செய்வது நல்லது.
மால்வேர், ஸ்பைவேர், ஆட்வேர்
உங்க கணினியில் மால்வேர், ஸ்பைவேர் மற்றும் ஆட்வேர் இருப்பது கணினிக்கு ஆபத்தானது ஆகவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.
விண்டோஸ் பீச்சர்ஸ்
நீங்க பயன்படுத்தாத விண்டோஸ் அம்சங்களை டிஸேபிள் செய்துவிடுங்கள்
இன்டெக்ஸிங் சர்வீஸ்
சில சமயம் சர்ச் இன்டெக்ஸிங் சர்வீஸும் உங்க கணினியின் வேகத்தை குறைத்து விடும், இதை தவிர்க்க இன்டெக்ஸிங் சர்வீசஸை ஆஃப் செய்து விடுங்கள்
ஸ்டார்ட் மெனு டிஸ்ப்ளே
உங்க ஸ்டார்ட் மெனு டிஸ்ப்ளே தாமதமாக செயல்படுகிறதா, அப்ப ஸ்டார்ட் மெனு சென்று regedit.msc கொடுத்து என்டர் பட்டனை அழுத்துங்கள், அங்கு ரிஜெஸ்ட்ரி எடிட்டர், கண்ட்ரோல் பேனல் – டெஸ்க்டாப் – மெனு ஷோ டிலே பட்டனை ரைட் க்ளிக் செய்து மாடிஃபை ஆப்ஷனை தேர்வு செய்து எடிட் ஸ்டிரிங்கில் 0 முதல் 4000 வரையான நம்பரை என்டர் செய்தால் வேலை முடிந்தது
தேவையற்ற ப்ரோகிராம்
உங்க கணினியில் பயன்படுத்தாத மென்பொருளை அன்இன்ஸ்டால் செய்யும் போது சில பைல்கள் கணினியில் அப்படியே இருக்கும் இதை தவிரக்க ரெவோ அன்இன்ஸ்டாலர் மென்பொருளை பயன்படுத்துங்கள்
ரீஸென்ட் ஐடெம்ஸ்
உங்க ரீசென்ட் ஐடெம்ஸில் நிறைய ப்ரோகிராம் இருந்தால் அதுவும் கணினியின் வேகத்தை குறைத்து விடும்
போல்டர்
ஒரே போல்டரில் நிறைய பைல்கள் இருந்தாலும் கணினி வேகம் குறையும் இதனால் நிறைய போல்டரை பயனப்டுத்துங்கள்
Category: துனுக்குகள்
0 comments