வி.களத்தூரில் நேற்று நடைப்பெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்!
பெரம்பலூர் மாவட்டத்தில் வி.களத்தூர் உள்பட 121 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வி.களத்தூரில் நேற்று காலை சுமார் 11.00 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவி நூருல் ஹுதா மற்றும் துணைத் தலைவர் ஜமால் தீன் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
வருங்காலச் சந்ததியினர் சுகாதார வசதி பெறும் வகையில், அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதி அமைக்க வேண்டும்.
தொடர்ந்து குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்குதல், பராமரித்தல், கொசு மூலம் நோய் பராவமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், திறந்த நிலையில் பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகளை கண்டறிந்து மூடுதல், சுகதாரம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், இறைச்சிகளை ஒழுங்குபடுத்தி சுகதாரத்தை பேனுதல், புகையிலை பயன்படுத்துவதை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், கிராம வறுமை ஒழிப்பு சங்க செயல்பாடுகள், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், கோமாரி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புத் திட்டம், தன்னிறைவு திட்டம், தூய்மை திட்டம், மாநில நிதிக்குழு மானிய நிதியை ஊராட்சிக்கு விடுவித்தல், மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
Category: உள்ளுர் செய்தி
0 comments