பெரம்பலூரில் அக். 15-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் 2014-ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு 28.05.2014 முதல் நடைபெற்று வரும் தொடர் திருத்தப் பணியின்போது பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் ஆகியவற்றின் வரைவு வாக்காளர் பட்டியல் அக். 15 காலை 10 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், வாக்காளர் பதிவு அலுவலரும், சார் ஆட்சியருமான ப. மதுசூதன் ரெட்டியால் வெளியிடப்பட உள்ளது. நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்கலாம்.
Category: மாவட்ட செய்தி
0 comments