பெரம்பலூர் 4 ரோட்டில் கார் மோதியதில் படுகாயமடைந்த பெண் சாவு!
அரியலூர் மாவட்டம் தா.பழூரை சேர்ந்தவர் முருகேசன். இவர் அங்குள்ள சிவன் கோவிலில் நாதஸ்வரம் வாசிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முருகேசனை பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காண்பித்து சிகிச்சை பெறுவதற்காக அவரது மனைவி கலாவதி அழைத்து வந்தார். திருச்சி–சென்னை நான்குவழிச்சாலையில் இருவரும் இறங்கி மருத்துவமனைக்கு செல்ல சாலையை கடந்தபோது போடிநாயக்கனூரை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த வந்த கார் கலாவதியின் மீது மோதியது. இதில் பலத்தகாயம் அடைந்த கலாவதிவை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கலாவதி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து கலாவதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
Category: மாவட்ட செய்தி
0 comments