தனியார் பால் லிட்டருக்கு ரூ 2 உயர்வு ஒரே ஆண்டில் 4 முறை அதிகரிப்பு!
சென்னை, அக்.5:
தமிழகம் முழுவதும் நாளை முதல், தனியார் பால் லிட்டருக்கு2
உயர்கிறது. விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரே ஆண்டில் 4 முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாள்தோறும் 1.5 கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆவின் நிர்வாகம் 23.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்து வருகிறது.
தனியார் நிறுவனங்கள் மூலம் 1.25 கோடி லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனியாருக்கு தமிழ்நாட்டில் 30 நிறுவனங்களும், ஆந்திராவில் 10 நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயர்வு, மூலதன பொருட்கள் விலை உயர்ந்துள்ளது என்பதை காரணம் காட்டி பால் விலையை ரூ2
உயர்த்த முடிவு செய்துள்ளனர். நாளை முதல் பால் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. தனியார் நிறுவனத்தின் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் தற்போது லிட்டருக்குரூ 46
என்று விற்படுகிறது. இது இனி
ஸி48க்கு
விற்கப்படும். அதே போல, சமன்படுத்தப்பட்ட பால்
ஸி42ல்
இருந்து
ஸி44க்கும்,
நிலைப்படுத்தப்பட்ட பால்
ஸி38ல்
இருந்து
ஸி40க்கும்,
கொழுப்பு நீக்கப்பட்ட பால்
ஸி34ல்
இருந்து
ஸி36
ஆகவும் விலை உயரும்.
இந்த விலை உயர்வுக்கு தனியார் பாலை உபயோகிப்போர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வு சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பால் நிறுவனத்தினர் கடந்த ஜனவரி, மார்ச், மே மாதத்தில் பால் விலையை லிட்டருக்கு
ஸி2
உயர்த்தினர். மூன்று தடவையும் சேர்த்து பால்
விலை
ஸி6
வரை உயர்த்தப்பட்டது. தற்போது, 4வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரே ஆண்டில்
ஸி8
வரை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களான நெய், வெண்ணெய், பால் கோவா, பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னு சாமி கூறியதாவது:
தனியார் பால் நிறுவனங்களே பால் விலை நிர்ணயம் செய்யும் முடிவை அரசு தடுத்த நிறுத்த வேண்டும். பால் விலை உயர்வு குறித்து அறிவிக்கும் வகையில் 4 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும். அதன் பின்னரே பால் விலையை உயர்த்த வேண்டும். அக்குழுவில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, மக்கள் தரப்பில் ஒரு பிரதிநிதி, தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் பிரதிநிதி, பால் முகவர்கள் சங்கம் சார்பில் ஒருவர் இடம் பெற்றிருக்க வேண்டும். இவர்களிடம் கருத்து கேட்டு இதை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர், தான் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டும். இப்படி தனிச்சையாக விலையை உயர்த்த கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் பால் மாதாந்திர கட்டணத்தில் டோன்ட் மில்க்(புளூ கலர்) அரை லிட்டர்
ஸி12க்கும்,
சில்லரை விலையில்
ஸி13.50க்கும்
விற்கப்படுகிறது. அதே போல ஸ்டேண்டர்டைஸ்டு மில்க்(கிரீன் கலர்)
ஸி14.50க்கும்,
சில்லரையில்
ஸி15.50க்கும்,
புல் கிரீம் மில்க்( ரெட் கலர்)
ஸி16.50க்கும்,
சில்லரையில்
ஸி17.50க்கும்,
டபுள் டோன்ட் மில்க் (மெஜன்தா கலர்)
ஸி11க்கும்,
சில்லரை விலையில்
ஸி12
ஆகவும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :ஸி - என்பதை ரூபாய் என மாற்றி படிக்கவும்.
Category: மாநில செய்தி
0 comments