ஜித்தா விமான நிலையத்தில் வயோதிக ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவும் IFF தன்னார்வலர்கள்!
ஜித்தா: ஹஜ் யாத்ரீகர்கள் பல நாடுகளிலிருந்தும் மக்காவை நோக்கி வரத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் வயோதிகர்களுக்கு உதவும் பணியை இந்தியா பிரடர்னிடி போரம் (IFF) தன்னார்வலர்கள் ஜித்தா விமான நிலையத்தில் தொடங்கியுள்ளனர்.
கடந்த மூன்று தினங்களாக இந்தியாவிலிருந்து வரும் வயதான ஹாஜிகளை சக்கர நாற்காலி மூலம் கொண்டு சென்று அவர்களது வாகனங்களில் ஏற்றுவது அவர்களது உடமைகளையும் முறையாக வாகனங்களில் ஏற்றுவது என தங்களது சேவை பணியை தொடங்கினர். நெடுந்தூரத்தின் காரணமாக களைபடைந்து வரும் ஹாஜிகளை வரவேற்று அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை அவர்களின் சொந்த மொழியிலேயே கொடுக்கும் போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.
IFF விமான நிலைய சேவை பிரிவின் தலைவர் முஜீப் (குண்டுர்) முன்னிலையில் சேவைகள் ஒருங்கினைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில் "தற்போது ஹாஜிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவே இந்தியா பிரடர்னிடி போரத்தின் தன்னார்வ தொண்டர்களின் எண்ணிக்கையையும் அதிக படுத்தவேண்டுமென இந்திய ஹஜ் மிஷனின் பொறுப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். வரும் நாட்களில் தன்னார்வ தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" என அவர் தெரிவத்தார்.
அட்டவணையின்றி வரும் விமானத்தின் மூலம் ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இருப்பினும் IFF தன்னார்வ தொண்டர்கள் அவர்களின் விமானநிலைய காரியங்களை விரைந்து முடிக்க உதவிசெய்வது அவர்களை மக்காவிற்கு அனுப்பி வைக்கின்றனர் எனப்து குறிப்பிடத்தக்கது.
Category: வளைகுட செய்தி


0 comments