“கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களின் காலாவதியை நீட்டிக்கக் கூடாது’!
மேலும் பழைய கடவுச்சீட்டுகளின் காலாவதி தேதியை நீட்டிக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கையால் எழுதப்பட்ட 20 ஆண்டுகள் செல்லத்தக்க கடவுச்சீட்டுகளை வைத்திருப்போருக்கு அதற்குப் பதிலாக இயந்திரத்தால் அச்சிடப்பட்ட கடவுச்சீட்டுகளை, 2015 நவம்பர் 24 -ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு அறிவித்தது. அதன்படி, கையால் எழுதப்பட்ட இந்தியர்களின் கடவுச்சீட்டுகள், 2010 ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டது. இந்தப் பழைய கடவுச்சீட்டை வைத்திருப்போருக்கு, அதற்கு மாற்றாக இயந்திரத்தால் அச்சிடப்பட்ட புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், சில மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களின் நிர்வாகம், கட்டணம் எதுவும் பெறாமல், பழைய கடவுச்சீட்டுகளிலேயே அவற்றின் செல்லுபடி காலத்தை நீட்டித்து ஒப்புதல் வழங்கி வருவதாக தெரிகிறது. இவ்வாறு செய்வதை தவிர்த்து, அனைத்து மண்டல பாஸ்போர்ட் அலுவலக
நிர்வாகங்களும், இயந்திரத்தால் அச்சிடப்பட்ட புதிய கடவுச்சீட்டுகளை கட்டாயம் வழங்க வேண்டும். இதற்கு, 5 ஆண்டுகள் செல்லத்தக்க கடவுச்சீட்டுக்கு ரூ.1000, 5 -10 ஆண்டுகள் செல்லத்தக்க கடவுச்சீட்டுக்கு ரூ.2,500 விண்ணப்பக் கட்டணம் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: மாநில செய்தி

0 comments