.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்த சென்னை முஸ்லீம் சிறுவன் அக்ரம்!

Unknown | 4:54 AM | 0 comments




 

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, இத்தாலிக், கொரியா, அரபிக், ஃப்ரெஞ்ச், ஹீப்ரு உட்பட சுமார் 50 மொழிகளில் தட்டச்சு (Typing) செய்யும் சென்னையை சேர்ந்த 8 வயது சிறுவன் அக்ரம்


சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது, ஆமினாள் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் மகமூத் அக்ரம். சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றான்.


இந்நிலையில் அக்ரமின் அபாரத் திறமையை அறிந்த, யுனிக் உலக சாதனைகள் (Unique World Records) அமைப்பு, தங்களுடைய 2014 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு, அக்ரமின் திறமையை வெளிக்காட்டுமாறு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து மகமூத் அக்ரம் கடந்த அகஸ்ட் 24 அன்று பஞ்சாபின் பதிண்டா (Bathinda) என்ற இடத்தில் நடைபெற்ற யுனிக் உலக சாதனைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அந்த விழாவில் பாராளுமன்ற தலைமை செயலரும், பதிண்டா தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஸ்ரீ சாருப் சந்த் சிங்லா மற்றும் கேரள மற்றும் லட்சத்தீவின் சாரணர் படையின் கமிஷ்னரும், செம்மனூர் இண்டர்நேசனல் ஜூவல்லர்ஸின் இயக்குநருமான ஹிஷாம் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்த விழாவில் யுனிக் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் அமைப்பின் பெயரை 50 மொழிகளில் டைய்து அக்ரமின் திறமையை வெளிக்காட்டுமாறு நிகழ்ச்சியாளர்கள் கோரினார். அக்ரமின் திறமையை எல்லாரும் அறிய பெரிய திரையில் திரையிட்டு காட்டப்பட்டது. அதன்படி கூடியிருந்த அனைத்து மீடியாவின் முன்பும், விழாவிற்கு வந்திருந்த அனைவரின் முன்பாகவும் மகமூத் அக்ரம் டைப்பிங் செய்து எல்லோரையும் ஆச்சரியத்தில் அசத்தினான்.

மகமூத் அக்ரமின் மாபெரும் நினைவாற்றல் திறமையை வியந்து, ஹிஷாம் ஹஸன் அவர்கள், எல்லா செய்தி ஊடகங்களையும் அழைத்து, இச்சிறுவனுக்கு நான் இன்று முதல் என்னுடைய நிறுவனத்தில் பணிக்கான நியமனத்தை வழங்குகிறேன் என்று கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதையடுத்து ‘WORLD’S YOUNGEST MULTILINGUAL TYPIST’ என்ற சாதனையாளர் விருதினை யுனிக் வேல்ர்ட் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் அக்ரமிற்கு வழங்கியது.

அக்ரமின் திறமையை இந்தியாவின் 14 மாநிலங்களில் மிகப்பிரபலமான 4 மொழிகளில் வெளியாகும் ‘தைனிக் பாஸ்கர்’ பத்திரிக்கை அக்ரமை பேட்டி கண்டு, தங்களுடைய பத்திரிக்கையில் வெளியிட்டது. இதுமட்டுமின்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற, உட்பட பல செய்தி ஊடகங்களும் மகமூத் அக்ரமை பேட்டி கண்டு, அபார திறமையை பாராட்டியுள்ளனர்.
இந்த சாதனை குறித்து அக்ரமின் பெற்றோர் கூறுகையில்; “எல்லாம் இறைவனின் நாட்டம். இறைவன் எங்களுக்கு தந்த அருட்கொடை அக்ரம். அக்ரமின் இந்த சாதனையை வெளிக்கொணர்ந்த, உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் கின்னஸ் சாதனையிலும் அக்ரமின் பெயர் இடம்பெற முயற்சி செய்து வருகின்றோம்.” என்றனர்.

அக்ரமின் இந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நீங்களும் உங்களின் பாராட்டுக்களை abdulhameedu@hotmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கலாம். அல்லது 9840098603 என்ற அலைபேசி எண்ணை தொடர்புகொண்டும் தெரிவிக்கலாம். 





 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1