துபாய் “ஜிடெக்ஸ் ஷாப்பர்14”எலக்ட்ரானிக் பொருட்களின் கண்காட்சி இன்று துவக்கம்!
துபாய்: உலகின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப, மின்னணு பொருட்களின் கண்காட்சிகளில் ஒன்றான துபாய் ‘ஜிடெக்ஸ் ஷாப்பர்' நாளை துவங்குகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலேயே இது மிகப்பெரிய எலக்ட்ரனிக் பொருட்களின் கண்காட்சியாகும் இக்கண்காட்சி துபாய் வேல்ட் ட்ரேட் சென்டரில் இன்று தொடங்குகிறது. காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை செப்டம்பர் 27ந்தேதி தொடங்கி அக்டோபர் 4ந்தேதி வரை நடைபெறுகிறது. வருடா வருடம் நடைபெறும் இந்த வர்த்தக திருவிழாவில் துவக்க நாள் முதலே மக்கள் கூட்டம் அலைமோதும்.உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் இதில் கலந்து கொள்வார்கள்.
நுகர்வோரை கவருவதற்காக உலகின் முண்ணனி எலக்ட்ரானிக் நிறுவனங்கள் மிகப்பெரிய சலுகைகளுடன் இக்கண்காட்சியில் பங்கேற்கும். உலகின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகச்சிறந்த நவீன எலக்ட்ரானிக் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அனைவரையும் கவரும் வகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு தயாரிப்புகளோடும் பெரும் பரிசுகளோடும் உலகில் முண்ணனி எலக்ட்ரானிக் நிறுவனங்கள் ஜிடெக்ஸ் சாப்பரில் பங்கேற்க உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: துபாய்



0 comments