பெரம்பலூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி சனிக்கிழமை சைக்கிள் போட்டி நடைபெற்றது.!
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடைபெற்ற போட்டியை, துணைக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தொடக்கி வைத்தார்.
மாணவர்களுக்கான போட்டியில் 13 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் கேந்ரிய வித்யாலயா பள்ளி சி. நவீன்குமார் முதலிடம், வி. முரசொலிமாறன் 2-ம இடம், தந்தை ரோவர் பள்ளி எஸ். அருண் 3-ம் இடம் பெற்றனர்.
15 வயதுக்குள்பட்டோர் போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி பி. மணிகண்டன் முதலிடம், கே. கார்த்திகேயன் 2-ம் இடம், டி. தீபன்ராஜ் 3-ம் இடம், 17 வயதுக்குள்டோருக்கான போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி எஸ். அசோக்குமார் முதலிடம், டி. பிரதீபன் 2-ம் இடம், எஸ். கோபாலகிருஷ்ணன் 3-ம் இடம் பெற்றனர்.
மாணவிகளுக்கான 13 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒய். ஆரோக்கிய எபிசியா டெல்சி முதலிடம், எஸ். அருணா 2-ம் இடம், கே. சோபனா 3-ம் இடம், 15 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வி. வினிதா முதலிடத்தையும், பி. குகனேஷ்வரி 2-ம் இடம், பி. ஜீவிதா 3-ம் இடம் பெற்றனர்.
17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பி. பிரின்சி முதலிடம், ஆர். கெளசல்யா 2-ம் இடம், என். மேகலா 3-ம் இடம் பெற்றனர். மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார். அனைத்து பிரிவுகளிலும் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. புண்ணியமூர்த்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மு. மருதமுத்து, தடகளப் பயிற்றுநர் க. கோகிலா உள்பட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நன்றி : வசந்த் ஜீவா & தினமணி .
Category: மாவட்ட செய்தி
0 comments