.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!

Unknown | 9:41 PM | 0 comments





சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது.

அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது. கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறு நீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை உண்டாக்குகிறது. இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும் போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது.

சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?

குடும்ப பாரம்பரியம் இதற்கு முக்கிய காரணம். ஆக்சலேட் நிறைந்த காய்கறி உணவுகள், தண்ணீரில் உள்ள தாதுப்பொருட்கள், மாமிசம், அதிக புரதச் சத்துள்ள உணவுகள் ஆகியவை சிறுநீர் கற்கள் உருவாக முக்கிய காரணம் ஆகும். இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச் சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
4. பிரத்யேக உறுப்புகளின் சுத்தமும் பராமரிப்பும் முக்கியம்!

சிறுநீரகக் கற்கள் யாருக்கு உண்டாகிறது?


30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஆண்கள், வேலை காரணமாக வெயிலில் செல்கின்றனர். கடும் வேலை பளு காரணமாக தண்ணீர் குடிக்காமல் சிறுநீர் கற்கள் ஏற்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் ஆக்சலேட்டை உடலில் அதிகமாக உற்பத்திச் செய்கின்றன.

சிறுநீரகக் கல் உருவானது அறிகுறி:

அடி வயிற்றில் வலி இருக்கும். குமட்டல், வாந்தி, படபடப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும். ஙீக்ஷீணீஹ். மிக்ஷிறி மற்றும் 24 மணி நேர யூரின் டெஸ்ட் செய்ய வேண்டும்.

சிறுநீரகக் கல் உருவானது எப்படித் தெரியும்?

மலைப் பகுதியான பெரம்பலூர் , வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் போன்ற ஏரியாக்களில் தண்ணீரில் சால்ட்கள் அதிகமுள்ளன. அந்த ஏரியாவின் பள்ளியில் உள்ள சிறுவர்கள் அடி வயிறு வலிக்கிறது என்று சொன்னதால் அவர்களுக்கு டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மாம்பழம், சீதாப்பழம் போன்றவை அதிக ஆக்ச லேட் கொண்டவை. பால், தயிர் மற்றும் பால், பொருட்கள் போன்றவை மூலம் கால்சியம் உள்ளே செல்வதால் உடலில் உள்ள உறுப்புகளில் கால்சியம் ஊறித் ததும்பிய நிலையில் இருக்கும்.

தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான லைஃப் ஸ்டைல், அதிகமான வேலைகள், டென்ஷன் போன்றவை பி.பி. போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக்கல்லுக்கும் ஒரு காரணம். முறையான வாழ்க்கை ஆரோக்கியமான உணவு நல்ல உறக்கம். மன அழுத்தமில்லா நிலை போன்றவை கிட்னி ஸ்டோனுக்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். சிறுநீர் கற்கள் உற்பத்தியாவதை தடுப்பது மருந்துகளில் இல்லை. அது நம் கையில்தான் உள்ளது. கிட்னி ஸ்டோன் பிரச்னைகளால் வலி மட்டுமல்லாமல் இறப்புகளும் கூட அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதனால் உணவில் கவனமாக இருங்கள்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

தேநீர், பருப்புக் கீரை
வாழைப்பூ, வாழைக்காய், கொள்ளு
கேசரி பருப்பு
மாம்பழம், சீதாப்பழம்
அரைக்கீரை, முருங்கைகாய்
தாமரைத்தண்டு, எள்
பச்சைமிளகாய், நெல்லிகனி

உட்கொள்ள வேண்டியவை:

நிறைய தண்ணீர்,
பழச்சாறு (எலுமிச்சை, மாதுளம், தர்பூசணி)
கேழ்வரகு
புழுங்கல் அரிசி
பருப்பு, காய்ந்த பட்டாணி
கோஸ், கேரட், வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய், அவரை, வெண்டைக்காய்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1