ஸ்வீடனில் முதன்முதலாக ஒலி பெருக்கி மூலம் அதான். அல்லாஹு அக்பர். (வீடியோ இணைப்பு)

உலகில் வழிபாட்டுத் தலங்கள் பல முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தப்பியவை நூலகங்களாகவும், அலுவலகங்களாகவும் மாற்றப்பட்டன.
இவற்றில் ஏராளமானவை பள்ளிவாசல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மத நம்பிக்கையற்றவர்களும், பிற மதங்களைச் சார்ந்திருந்தவர்களும் அறிவுப்பூர்வமாக உணர்ந்தும், படித்தறிந்தும், மன அமைதிக்காகவும் இஸ்லாத்தின் கதவை தட்டியவண்ணம் உள்ளனர்.
அவர்களின் வருகை காரணமாக புதிய புதிய பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு வருகின்றன. ஸ்வீடனில் உள்ள ஃபித்ஜா மஸ்ஜிதில் இனி வரும் காலங்களில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்காக ஒலி பெருக்கி மூலம் அதான் (தொழுகைக்கான அழைப்பு) கொடுத்துக் கொள்ளலாம் என்ற அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
இனி பள்ளியின் மினாராக்களில் பாங்கின்அழைப்பொலி அந்த அழகிய நகரை அலங்கரிக்கும். ‘நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். பாங்கு சொல்லஅனுமதி கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்’ என்கிறார் போத்கிர்கா நகராட்சியின் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் இஸ்மாயில். பிற்பகல் 12 மணியிலிருந்து ஒருமணிக்குள் ஒலி பெருக்கி மூலம் தொழுகைக்கான அழைப்பைக்கொடுத்துக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியானது பூட்டப்பட்ட பல மஸ்ஜிதுகளுக்கும் பரவும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் அந்த அளவு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
Category: சமுதாய செய்தி

0 comments