.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சில கீரை வகைகளும் அதிலுள்ள சத்துக்களும்!

Unknown | 2:17 PM | 0 comments








ஆரோக்கிய உணவில் முதலிடம் வகிப்பது கீரைதான். இதை உண வில் தினமும் சேர்த்து வந்தால் நோய் நொடி அண்டாது. ஒவ்வொரு

கீரைக்கும் உள்ள சத்துக்களை காண்போம்.

முருங்கைக் கீரை –

விட்டமின் ஏ,பி,சி, கணிசமான அளவு இரும்புச் சத்துள்ளது. செரிமானம் குறை ந்த குழந்தைகள், இதய நோயாளிகள் இரவில் சாப்பிடக் கூடாது. கண் பார்வை யைத் தெளிவாக்கும் குணம் கொண்டது. தாது பலம் பெருகும்.

வெந்தயக் கீரை-

இரும்புச் சத்து, விட்டமின் ஏ,சுண்ணாம்பு சத்து கொ ண்டது. வளரும் குழந்தை களுக்கும் மூல வியாதிக் காரர்களுக்கும் நீரிழிவு நோயா ளிக்கும் ஏற்றது. சூட்டைத் தணித்து உடலு க்கு வலுவூட்டும்.

அகத்திக் கீரை-

விட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்பு சத்து கொண்டது. வாய் மற்றும் வயிற்றில் புண் உள்ளர்வர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடனடி நிவாரணம் கிடை க்கும். மற்ற மருந்துகள் சாப்பிடும் போது இதைச் சாப்பிடக்கூடாது. வயதானவர்க ள் சூப் பதத்தில் மட்டுமே சாப்பிட வேண் டும்.

பசலைக் கீரை

வைட்டமின் ஏ 5580 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் , இரும்பு 1.14 மி.கி., பொட்டா ஷியம் 306 மி.கி ஆகியவை உள்ளன. பார்வைக் கோளா றைக்தடுக்க உதவும் வைட்டமி ன் ஏ உடல் சோர்வைத்தடுக்க உதவும் பொட்டாஷியச்சத்து ஆகியவை பசலைக்கீரையில் உள்ள ன.

மணத்தக்காளி-

விட்டமின் பி12, மற்றும் ஏரி போப்வி ன் கொண்டது. வாய்ப்புண் மற் றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு நல் லது, உடல் சூட்டைக் குறைக்கும். காயத்தை ஆற்றும். வயிற்றில் பூச்சி கள் உருவாகாமல் தடுக்கும்.

வல்லாரை-

செரடோனியம் கொண்டது. பள்ளிக் குழந்தைக ளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது செய்து தர வேண்டும். மூளைக்கு வலுவூட்டி நினைவாற்ற லைப் பெருக்கும் தன்மை கொண்டது.
*

*
புதினா-

இரும்பு, சுண்ணாம்பு சத்து, விட்டமின்சி, விட்டமின் டி கொண்டது, ஆஸ்துமா நோயா ளிகளுக்கு நல்லது. மூல நோய், தொண்டை யில் ரணம். குடல் புண் உள்ளவர்கள் சாப் பிடக் கூடாது. பசியையும் நாக்கின் ருசியை யும் தூண்டக் கூடியது. செரிமானத்துக்கு உதவும்.

கொத்துமல்லி-

விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் சி கொண்டது. எல்லோருக்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை க் கொடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். நாவின் ருசியைத் தூண்டும்.
*

முளைக்கீரை-

தாது உப்புகள் மற்றும் விட்டமின் ஏ கொ ண்டது. உடல் தளர்ச்சியைப் போக்கும். சதை ப்பிடிப்பு இல்லாதவர்கள் அடிக்கடி சாப்பிட லாம். ஆஸ்துமா நோயாளிகள். தலையில் நீர் கோத்து இருப்பவர்கள் சாப்பிடக் கூடா து. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1