துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகள்!
துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்
ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
குறிப்பு:- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் – புகாரிமுஸ்லிம்
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.
ஆதாரம் புகாரி முஸ்லிம்
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அஹ்மத்
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.
ஆதாரம் – புகாரி
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.
ஆதாரம் :- புகாரி முஸ்லிம்
6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.
ஆதாரம் – புகாரி
உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்
– ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)
– ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி)
– மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம் – (திர்மிதி)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
நேரம்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் – புகாரி, முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை
– ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)
– ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
– அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்
உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
ஆதாரம்:- முஸ்லிம்
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.
மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
உழ்ஹிய்யா தொடர்பான சட்டங்கள்
உழ்ஹிய்யா என்பது பெருநாள் தினம் முதல் அய்யாமுத்தஸ்ரீக் இறுதி நாள் பிறை 13 வரை உள்ள நாட்களில் செய்ய வேண்டிய அமலாகும்.
இப்னு உமர் (றழி) அவர்களிடம் ஒரு மனிதர் உழ்ஹிய்யா என்பது வாஜிபா எனக் கேட்ட போது நபியவர்களும் முஸ்லிம்களும் உழ்ஹிய்யா கொடுத்துள்ளார்கள் எனக் கூறினார்கள்.இக்கருத்தை பதிவு செய்திருக்கும் இமாம் திர்மிதி அவர்கள் உழ்ஹிய்யா என்பது அறிஞர்களிடத்தில் வாஜிபல்ல என்றும் இக்கருத்தே நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.
உழ்ஹிய்யா கொடுக்க விரும்பும் ஒருவர் தனது நகம், முடி போன்றவைகளை வெட்டுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
உம்மு ஸலமா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். துல்ஹஜ் மாத பிறையினை நீங்கள் கண்ட பின் உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால் அவர் தனது நகங்களையும், முடியினையும் (நீக்காது) தவிர்த்துக் கொள்ளவும். (முஸ்லிம்)
உம்மு ஸலமா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். துல்ஹஜ் மாத பிறையினை நீங்கள் கண்ட பின் உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க விரும்பினால் அவர் தனது நகங்களையும், முடியினையும் (நீக்காது) தவிர்த்துக் கொள்ளவும். (முஸ்லிம்)
ஒருவர் நகங்களையும், முடியினையும் அகற்றும் பட்சத்தில் அதற்காக குற்றப் பரிகாரம் எதுவும் இல்லை. எனினும் அது தவறு. தவறுக்காக தௌபா செய்தல் போதுமானதாகும்.
உழ்ஹிய்யா கொடுக்கும் தினங்கள் துல்ஹஜ் பிறை 10,11, 12, 13 என்பனவாகும்.
ஜுபைர் இப்னு முத்இம் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஓரு ஹதீஸில் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
ஜுபைர் இப்னு முத்இம் (றழி) அவர்கள் அறிவிக்கும் ஓரு ஹதீஸில் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
மினாவின் மைதானம்; அனைத்தும் ஹஜ்ஜுக்கான குர்பானியை அறுக்கும் இடங்களாகும். அய்யாமுத்தஸ்ரீக் நாட்கள் அனைத்தும் அறுக்கும் தினங்களாகும். (தாரகுத்னீ)
உழ்ஹிய்யா கொடுக்கும் பிராணியை நன்றாக உணவு கொடுத்து கொழுக்க வைப்பது சிறந்ததாகும்.அபூ உமாமா (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாங்கள் உழ்ஹிய்யா கொடுக்கும் பிராணிகளை மதீனாவில் கொழுக்க வைப்போம். ஏனைய முஸ்லீம்களும் கொழுக்க வைப்பார்கள். (புஹாரி)
உழ்ஹிய்யா பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் எனக் கூறி அறுக்க வேண்டும்.அனஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கறுப்பும் வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரு ஆடுகளை உழ்ஹிய்யா கொடுத்தார்கள். தனது காலினை அதன் கழுத்தின் ஓரங்களில் வைத்து பிஸ்மி, தக்பீர் கூறி தனது கையினால் அறுத்தார்கள். (புஹாரி)
அங்கப் பழுதற்ற பிராணிகளை அறுத்தல்.
நபியவர்களிடத்தில் உழ்ஹிய்யா பிராணிகளில் தவிர்த்துக் கொள்ள வேண்டியவை பற்றி கேட்கப்பட்ட போது தனது கையினால் நான்கு என சைகை காட்டினார்கள். இச் செய்தியை அறிவிக்கும் பறா இப்னு ஆஸிப் (றழி) அவர்கள் தனது கையினாலும் அவ்வாறு சைகை காட்டி எனது கை நபியவர்களின் கையை விட சிறியது எனக் கூறி, தெளிவான நொண்டியும், தெளிவான குருடும், அதிக நோய் பீடித்ததும், அதிக மெலிந்ததும் என கூறினார்கள். (முவத்தா)
எனவே இவை தவிர்ந்த கொம்புடைந்த, சிறிய காயமேற்பட்ட பிராணியை அறுப்பதில் எவ்வித தவறுமில்லை.
உழ்ஹிய்யா பிராணியின் இறைச்சியையோ, தோலையோ உழ்ஹிய்யா கொடுத்தவர் விற்பதோ, கூலியாக கொடுப்பதோ கூடாது.
அலி (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் அறுத்தவருக்கு அதிலிருந்து எதையும் கூலியாக கொடுக்க வேண்டாம் என கட்டளையிட்டார்கள். (புஹாரி, முஸ்லிம்)
அலி (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபியவர்கள் அறுத்தவருக்கு அதிலிருந்து எதையும் கூலியாக கொடுக்க வேண்டாம் என கட்டளையிட்டார்கள். (புஹாரி, முஸ்லிம்)
உழ்ஹிய்யா கொடுக்கும் பிராணிகள்.
உழ்ஹிய்யா கொடுக்கும் பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகை ஆகும்.
உழ்ஹிய்யா கொடுக்கும் பிராணிகள் ஆடு, மாடு, ஒட்டகை ஆகும்.
அதாஃ இப்னு யஸார் அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அபூ அய்யூப் அல் அன்ஸாரி அவர்களிடம், நபியவர்களின் காலத்தில் உழ்ஹிய்யா எவ்வாறு இருந்தது எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஒரு ஆட்டை உழ்ஹிய்யாவாக கொடுப்பார் அதை அவர்களும் உண்டு பிறருக்கும் கொடுப்பார்கள் என்றார்கள். (திர்மிதி)
நான் அபூ அய்யூப் அல் அன்ஸாரி அவர்களிடம், நபியவர்களின் காலத்தில் உழ்ஹிய்யா எவ்வாறு இருந்தது எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஒரு ஆட்டை உழ்ஹிய்யாவாக கொடுப்பார் அதை அவர்களும் உண்டு பிறருக்கும் கொடுப்பார்கள் என்றார்கள். (திர்மிதி)
மேற்படி ஹதீஸிலிருந்து குர்பானி கொடுத்தவர் அந்த பிராணியின் இறைச்சியை தாராளமாக உண்ணலாம் என்றும் தெளிவாகின்றது.
ஏழு பேர் சேர்ந்து கொடுத்தல்
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாங்கள் நபியவர்களோடு பிரயாணத்திலிருந்தோம். அப்போது ஹஜ்ஜுப் பெருநாள் தினம் வந்தது. ஏழு பேர் ஒரு மாட்டிலும், பத்துப் பேர் ஒரு ஒட்டகத்திலும் சேர்ந்து கொண்டோம். (திர்மிதி)
இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நாங்கள் நபியவர்களோடு பிரயாணத்திலிருந்தோம். அப்போது ஹஜ்ஜுப் பெருநாள் தினம் வந்தது. ஏழு பேர் ஒரு மாட்டிலும், பத்துப் பேர் ஒரு ஒட்டகத்திலும் சேர்ந்து கொண்டோம். (திர்மிதி)
உழ்ஹிய்யாவில் கவனிக்க வேண்டியவை
1. உழ்ஹிய்யாவாக கொடுக்கப்படும் பிராணிகளை கஷ;டப்படுத்தாது குறைந்தது 12 மணித்தியாலங்களுக்கு முன் ஓய்வெடுக்க விட வேண்டும். அப்போதுதான் பிராணியின் இரத்தம் கூடுதலாக வெளியேறி இறைச்சி சுiவையாகவும், சுகாதார பூர்வமாகவும் இருக்கும்.
2. உழ்ஹிய்யா பிராணியை அறுப்பதற்கு முன் போதுமான நீரை அருந்த விட வேண்டும். இதன் போது குடல்களுக்குள் இருக்கும் நுண்கிருமிகள் குறைவதோடு, தோலையும் இலகுவாக உரித்தெடுக்க முடியும்.
3. அறுப்பதற்கு 12 மணித்தியாலங்களுக்கு முன் பிராணிக்கான உணவினை குறைப்பதன் மூலம் குடல்களில் ஒட்டியிருக்கும் பக்டீரியாக்களை குறைக்க முடியும்.
4. அறுப்பதற்கு பயன்படுத்தப்படும் கத்தி கூராக இருத்தல் நபியவர்கள் காட்டிய ஸுன்னாவாகும்.
நீங்கள் அறுக்கும் போது கத்தியை கூராக்கி கொள்வதன் மூலம் பிராணியை அமைதியடையச் செய்யவும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
5. அறுக்கும் போது இரு பிடரி நரம்புகளை வெட்டுவதன் மூலம் சுமார் மூன்றில் இரண்டு வீத இரத்தம் குறுகிய நேரத்தில் வெளியேறுகின்றது.
6. மூச்சுக் குழாயினை அறுப்பதால் காற்று நுரையீரல் பகுதிக்கு செல்வதை தடுக்கின்றது. ஏனெனில் நுரையீரலுக்கு உள்ளே இருக்கி;ன்ற காற்றழுத்தம் வெளியில் இருக்கின்ற காற்றழுத்தத்திற்கு சமனாகும். இதனால் பிராணி மூச்சு விட எத்தனிக்கும். ஆனால் மூச்சுக் குழாய் அறுபட்டதும் வெளியிலிருந்து ஒட்சிசனை உள்ளெடுக்க முடியாமல் விரைவாக மரணிக்கும். இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது போல் பிராணிகளை மரண வேதனையிலிருந்து விடுவிக்க முடியும்.
7. உணவுக் குழாயை துண்டிப்பதன் மூலம் குடலில் இருக்கின்ற பித்த நீர்களும் சுரப்பி நீர்களும் வெளியில் செல்ல வழி பிறக்கும். இதனால் உடலினுள் பக்டீரியா பரவாமால் தடுக்கப்படுகின்றது.
எனவே இவ்வாறான விடயங்களை கவனத்திற் கொண்டு செயல்பட அல்லாஹ் அருள் புரிவானாக!
Lajnathus Sunnah An Nabaviyyah
PO.BOX-20, Kattankudy, Srilanka
Email- lajnathussunnah@gmail.com
TEL- 0094652248403

Category:
0 comments