வேப்பந்தட்டையில் 1.5 கோடியில் புதிய ஒன்றிய அலுவலகம்!
பெரம்பலூர், செப். 25:
ரூ1.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளை கலெக்டர் தரேஸ் அகமது நேரில் பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய அலுவலகக் கட் டிடம் கட்டப்பட்டு வரு கிறது. ரூ1.56 கோடி மதிப் பீட்டில் தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களாக ஊராட்சி ஒன் றிய அலுவலகம் கட்டப்பட்டு வருகின்றது. தரைதளத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்ட மன்றம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அறை, காசாளர் அறை, உள் ளாட்சி நிதி உடன் நிகழ்வு தணிக்கையாளர் அறை, பதிவு வைப்பு அறை, இருப்பு அறை, கழிப்பறை வசதி, வட்டார ஊராட்சி பிரிவு ஆகிய அறைகளும், முதல் தளத்தில் கிராம ஊராட்சிப்பிரிவு, ஒன்றிய பொறியாளர் பிரிவு, 200 இருக்கை வசதியுடன் கூடிய ஊராட்சி அலுவலகக் கூட்ட அரங்கம், கணினி பிரிவு, கழிப்பறை வசதிகளு டன் கட்டப்பட்டு வருகிறது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் கட்டிட கட்டுமானப் பணி களை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அகமது நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தள வசதி, அறைகளில் கண் ணாடி ஜன்னல்களின் செயல்பாடு, தரை அமை ப்பு, கதவு அமைப்புகள், அறைகளில் செய்யப்பட்டு ள்ள வசதிகளை பார்வை யி ட்டு ஆய்வு செய் தார். கட் டிடப் பணிகளில் மீத முள்ள மின் வசதிப் பணி களை விரைவில் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெயலட்சுமி கனகராஜ், வட்டார வளர்ச்சிஅலுவலர் பாரதிதாசன், பொறியாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments