அயன் பேரையூரில் கொன்று புதைக்கப்பட்ட குழந்தை தோண்டியெடுப்பு!
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகே பிறந்து சில நாள்களே ஆன நிலையில் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் ஞாயிற்றுக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.
வி.களத்தூர் அருகேயுள்ள அயன்பேரையூர் வெள்ளாற்று மணல் பகுதியில் பிறந்து ஓரிரு நாள்களே ஆன குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக அயன்பேரையூர் விஏஓ நல்லுசாமி, வி.களத்தூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் வி.களத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், வேப்பந்தட்டை வட்டாட்சியர் ஏழுமலை மற்றும் வி.களத்தூர் போலீஸார் அரசு மருத்துவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அடக்கம் செய்தனர்.
வி.களத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) தே. சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
Category: மாவட்ட செய்தி
0 comments