இந்திய மதரசாக்களில் தீவிரவாதம் கற்பிக்கப்படுகிறது! அவதூறுகளை அள்ளி வீசிய பா.ஜ.க எம்.பி! முஸ்லிம்கள் அதிர்ச்சி!
யோகி ஆதித்யாநாத்க்கு அடுத்தபடியாக மற்றொரு பா.ஜ.க எம்.பி சக்ஷி மகாராஜ் சிறுபான்மையினருக்கு எதிராக கண்டனத்திற்குரிய கருத்தை தெரிவித்திருப்பது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவோ தொகுதி எம்.பி. சக்ஷி மகாராஜ், மதரசா பள்ளிகள் தீவிரவாதத்தை போதிப்பதாக கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மதரசாக்களில் தீவிரவாதம் போதிக்கப்பட்டு வருகிறது. மதரசாக்களிலிருந்து தீவிரவாதிகளும், ஜிகாதிகளும் உருவாக்கப்படுகின்றனர். இது தேசத்திற்கு நல்லதல்ல.
மதப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தேசியவாதம் பற்றி போதிக்கப்படுவதில்லை. குடியரசு தினத்தன்றும், சுதந்திர தினத்தின் போதும் ஒரு மதரசா கூட மூவர்ணக் கொடியை ஏற்றுவதில்லை.
தேசியவாதத்துடன் எந்த ஒற்றுமையும் இல்லாத மதரசாக்களுக்கு அரசு நிதியை வழங்கிக்கொண்டிருக்கிறது என சக்ஷி மகாராஜ் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
முஸ்லிம்களின் மீது அவதூறு புகட்டி அதன் மூலமாக இந்து மக்களிடம் நற்பெயர் வாங்கலாம் என்ற எண்ணம் அறிவார்ந்த இந்து சமூகத்திடம் பலிக்காது . அனைத்து மதத்திலும் தீவிரவாதிகள் இருப்பான் , அவன் செய்வதற்கு அவனை சார்ந்து இருக்கிற மதம் ஒரு பொழுதும் பொறுப்பாகாது.
இவர் மீது பாபர் மஸ்ஜிதின் இடிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மதத்தின் மீது அதன் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக பாயும் இவர்களும் இஸ்லாத்தில் இணைவது ரொம்ப காலம் இல்லை இறைவன் நாடினால்...
Category: சமுதாய செய்தி

0 comments