சவூதி அரேபியாவில் தொழில் புரிபவர்களுக்கோர் வரப்பிரசாதம்!
சவூதி அரேபியத் தொழிலமைச்சு தனது உத்தியோகபூர்வ சமூக வலைத் தளங்களில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், புதிதாக பணிக்கமர்த்தப்படும் வெளி நாட்டுத் தொழிலாளர்கள் தாம் வேலை செய்யும் கம்பெனியானது கம்பெனி தரப்படுத்தலில் சிகப்பு அல்லது மஞ்சள் நிறத்துக்கு தரம் இறங்கி இருக்கும் நிலையில், தாங்கள் விரும்பினால் தரபப்டுத்தலில் பச்சை நிறத்தைக் கொண்ட கம்பனிகளில் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம் என்றும்,
இவ்வாறு ஊழியர்கள் பிற கம்பெனிகளில் தொழில் வாய்ப்பு பெற வழங்கப் படும் No Objection Certificate (NOC) எனப்படும் “ஆட்சேபனை விலக்கழிப்பு சான்றிதழ்” வழங்க தற்போதைய கம்பெனி மறுக்குமாக இருந்தால் குறித்த கம்பனியின் மேற்படி சான்றிதழ் இன்றி பிறிதொரு கம்பெனியில் சேர்ந்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
இந்த அறிவித்தலின் அடிப்படையில் ஒரு கம்பனியானது தரப்படுத்தலில் சிகப்பு அல்லது மஞ்சள் நிறத்தை அடையுமாயின் அக் கம்பெனி புதிய தொழிலாளர்களை நியமிக்கவோ நடைமுறையில் உள்ள தொழிலாளர்களின் தொழில் சான்றிதழ்களை புதுப்பிக்கவோ முடியாது.
இந்த அறிவித்தலை பிலிப்பைன் நாட்டவர் உட்பட அநேகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.கடந்த இரண்டு மாதங்களாக பிலப்பைன் நாட்டவர்கள் இவ்வாறான பிரச்சினை காரணமாக தொழில் சங்க நடவடிக்கைகளில் ஈடு பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயம்.
இந்த ஆலோசனையானது வெளிநாட்டு தொழிலாளர்கலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவதோடு அவர்களை சரியான ஒரு புதிய பாதையில் இட்டுச்செல்லுவதற்கு வழி கோலும் எனக் கருதுவதாகவும்,
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தொழில் சம்பந்தமான பிணக்குகளை நேரடியாக முறையிடுவதற்கு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் எனவும் சவூதி தொழில் அமைச்சு அதிகாரிகள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Category: வளைகுட செய்தி
0 comments