சவூதி அரேபியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்? ? 88 பேர் கைது!
சவூதி அரேபியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டினார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் பெயரில் 10 பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய 88 பேரை சவூதி அரேபிய பொலிசார் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து கைது செய்துள்ளதாக இன்று ஊடகங்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிற்குள்ளும் மற்றும் வெளிநாடுகளிலும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.இதை சவூதி அரேபிய பாதுகாப்பமைச்சின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் அல் துர்கி ஊர்ஜிதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட 88 நபர்களுள் அதிகமானவர்கள் சவூதி அரேபியாவை சேர்ந்தவர்களே. Yemen நாட்டை சேர்ந்த மூவரும் மற்றும் அடையாளப்படுத்தப்படாத வெளிநாட்டை சேர்ந்த ஒருவரும் இதில் உள்ளடங்குவதாக அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.. வெளிநாட்டை சேர்ந்த அடையாளப்படுத்தப்படாத நபர் தொடர்பில் சந்தேங்கங்கள் எழுந்துள்ளமை விசேட அம்சமாகும்.
நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் பொலிசார் இதற்கு முன்பும் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் 59 பேரை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதிலும் தொடர்ச்சியான கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என CNN செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
Category: வளைகுட செய்தி
0 comments