மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் கூடும் புனித ஹஜ்ஜில் சவூதி முன்னெடுத்துள்ள பாதுகாப்பு திட்டங்கள். ( 60,000 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட) (படங்கள் இணைப்பு)
தற்பொழுது உலகெங்கிலும் வாழும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதர்க்கான ஆயத்தில் இருக்கின்றார்கள். இதற்க்கான முன்னேற்பாடாக சவூதியின் ஹஜ் விவகார அமைச்சு பல்வேறுபட்ட நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி ஒஸ்மான் அல் மஹ்ராஜ் இந்த வருடம் புனித ஹஜ் யாத்திரைக்காக வருபவர்களின் பாதுகாப்பு கருதி சுமார் 60,000 பாதுகாப்பு படை வீரர்களை நியமித்துள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் புனித மக்காவிலுள்ள மீனா, அரபா மற்றும் முஸ்தலிபா போன்ற முக்கிய இடங்களில் வருகை தரும் ஹாஜிகளின் பாதுகாப்பு மற்றும் பயண வசதிகளுக்கு உதவியாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அது மட்டுமல்லாது புனித மக்காஹ் நகருக்குள் ஹாஜிகளை ஏற்றிவரும் வாகனங்களை இலகுவளியில் கண்டறிய புதிய ” Bar Code ” முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதுடன் இதற்காக புதிய வகையான கணணிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 25 பேருக்கு மேல் பயணம் செய்யும் வாகனங்களே மக்காவிற்குள் அனுமதிக்கப்படும்.
இந்த வருட ஹஜ் சேவைகளுக்காக மக்காஹ் நகர சபை 23,000 பணியாட்களை வேலைக்கு அமர்த்தவுள்ளதுடன் அதில் 14,000 பேர் புனித ஹரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட துப்பரவு செய்யும் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மக்காஹ் நகரிலே தற்பொழுது 33,000 நிரந்தர விற்பனை நிலையங்கள் இயங்குகிறது இதற்க்கு மேலதிகமாக இந்த முறை ஹஜ் பயணிகளின் நன்மை கருதி 2,229 தர்க்காலிக விற்பனை நிலையங்கள் நிருவப்படவுள்ளதுடன் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலைகளும் நிர்ணயம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும் என மக்காஹ் நகரசபை அறிவித்துள்ளது.




Category:
0 comments