பெரம்பலூர் அருகே அரசு விரைவு பஸ் மரத்தில் மோதி 17 பேர் காயம்!
பெரம்பலூர், செப். 21–
சென்னையில் இருந்து பழனி நோக்கி அரவு விரைவு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சில் மொத்தம் 16 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். பஸ்சை டிரைவர் நாகராஜன் (39) என்பவர் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவரான கன்னியாகுமரியை சேர்ந்த துரைசாமி மகன் சுதர்சன் (44) ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பஸ் பெரம்பலூர் நால்ரோடு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் டிரைவர் சுதர்சன், சென்னை அமிஞ்சிகரையை சேர்ந்த சதீஸ் (21), திண்டுக்கல்லை சேர்ந்த தரணி (35), சண்முகம் (23), போடியை சேர்ந்த முருகன் (51), கண்ணன் (30) உள்பட 17 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Category: மாவட்ட செய்தி
0 comments