உட்செவி அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட 16 குழந்தைகள், தனி வாகனத்தில் சென்னை பயணம் கலெக்டர் வழி அனுப்பி வைத்தார்
உட்செவி அறுவை சிகிச்சை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 16 குழந்தைகளை தனி வாகனத்தில் சென்னை க்கு கலெக்டர் தரேஸ் அஹமது வழியனுப்பி வைத்தார்.
அறுவை சிகிச்சை
முதல்- அமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் பயன் பெறுவதற் காக பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டாரங் களில், அத்திட்டத்தில் அங்கீ காரம் பெற்ற மருத்துவ மனைகளின் சிறப்பு மருத்துவர் கள், மருத்துவ உபகரணங்களை கொண்டு தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் மாற்றுத் திறனாளி களுக்கு 4 வட்டாரங்களிலும் அனைவருக்கும் கல்வி இயக் கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை செய் யப்பட்டு, அதன் மூலமும் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத் திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
6 வயதிற்கு உட்பட்டவர்கள்
குறிப்பாக, பிறவியிலேயே காது கோளாதவர்களுக்கு காக்கிளியர் இம்ப்ளாண்ட் (உட்செவி அறுவை சிகிச்சை) மூலமாக அறுவை சிகிச்சை செய்து, தொடர் பயிற்சியின் மூலமாக பேச்சு மற்றும் கேட்கும் திறனை மேம்படுத்த முடியும். இந்த அறுவை சிகிச்சை 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செய்தால் மட்டுமே பயன்தரும் என்ப தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பு ஆசிரியர் கள், பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள அனைத்து அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மைய பயிற்றுனர்களுக்கு, சிறப்பு மருத்துவர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக மாவட் டத்தின் அனைத்து பகுதி களிலும் உள்ள 6 வயதிற்கு உட் பட்ட பிறவியிலேயே காது கேளாத குழந்தைகள் கண் டறியப்பட்டு முதல்- அமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள காது, மூக்கு, தொண்டை சிகிச்சை யளிக்கும் சிறப்பு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பின்னர் அம் மருத்துவமனை மருத்துவர் களாலேயே 1 ஆண்டு பேச்சுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதுவரை 39 குழந்தைகளுக்கு தலா ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
16 குழந்தைகள் தேர்வு
மேலும் இந்த குறையுடைய குழந்தைகளை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று, தகுதியான காது கேளாத குழந்தைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வுகளின் அடிப் படையில் 6 வயதிற்கு உட்பட்ட மேலும் 16 குழந்தைகளுக்கு உட்செவி அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர் களால் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை பயணம்
இந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பெரம்பலூரில் இருந்து சென்னையில் உள்ள முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் சிறப்பு மருத்துவமனைக்கு தனி வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை கலெக்டர் தரேஸ் அஹமது வழியனுப்பி வைத் தார். இந்த நிகழ்ச்சியில் அனை வருக்கும் கல்வி இயக்க மாற்றுத்திறனாளிகள் ஒருங் கிணைப்பாளர் மாலதி, மாவ ட்ட உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments