பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்; 16 பேர் காயம்!
பெரம்பலூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.
லாரி மீது அரசு பஸ் மோதல்
திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையில் பெரம்ப லூரை அடுத்த எளம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் நேற்று காலை ஒரு கண்டெய் னர் லாரி சென்று கொண்டிருந் தது. லாரியை முசிறி ஜம்புநாத புரத்தை சேர்ந்த கார்த்திக் ஓட்டினார்.
அப்போது மதுரையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் அந்த லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது லாரியின் பின்புறம் அந்த பஸ் மோதியது.
16 பேர் காயம்
இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் தென்காசி மேல கவுண்டர்பட்டியை சேர்ந்த சதீஷ் (வயது 27), பஸ்சில் இருந்த பயணிகள் மதுரையை சேர்ந்த தவமணி (35), ராமநாதபுரம் முதுகுளத் தூரை சேர்ந்த சரவணன் (27),சென்னை அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சரஸ்வதி, (58), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கோபால் (48), கோட்டைபட்டினத்தை சேர்ந்த குமார் (43), விருது நகரை சேர்ந்த டேவிட் (23) உள்பட 16 பேர் காயம் அடைந்தனர்.
விசாரணை
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து இடிபாடு களுக்கு இடையே சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களில் 8 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Category: மாவட்ட செய்தி
0 comments