.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வேப்பந்தட்டை அருகே குடும்ப பிரச்சினையில் திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை!

Unknown | 2:47 PM | 0 comments




வேப்பந்தட்டை அருகே குடும்ப பிரச்சினையில் திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

10 மாதங்களுக்கு முன்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் வினோத் குமார் (வயது 31) தொழிலாளி.

வினோத்குமாருக்கும் அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து மகள் இளமதிக்கும் (25) கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

தகராறு

திருமணம் ஆன நாளில் இருந்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. வினோத்குமார் மது குடித்துவிட்டு வந்து மனைவி யிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள உத்திரத்தில் இளமதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வினோத்குமார் உயிருக்கு ஆபத்தான நிலை யில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி பெரம்பலூரில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உதவி கலெக்டர் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் இளமதிக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆவதால் அவர் சாவுக்கு வரதட்சணை காரணமா? அல்லது வேறு காரணமா? என்பது பற்றி பெரம்பலூர் உதவிகலெக்டர் மதுசூதன் ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1